இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் சேவாக் விளையாடாதது குறித்து இந்திய கேப்டன் மகேந்திர சிங் டோனி ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.
தோள்பட்டை காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்ட சேவாக், இப்போது குணமடைந்து வருகிறார். இந்த நிலையில் டோனி மேலும் கூறியது:
உலகின் மிகச்சிறந்த தொடக்க வீரர்களில் சேவாக்கும் ஒருவர். அவர் தனது அபார ஆட்டத்தால் போட்டியின் போக்கையே மாற்றக்கூடியவர். இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்களை நம்பியுள்ளது. அவர்கள் நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தினால், நடுத்தரமட்ட துடுப்பாட்டககாரர்கள் அதை சரியாகப் பயன்படுத்திக் கொள்வார்கள். இருப்பினும் மிகச்சிறந்த தொடக்க ஆட்டக்காரரான சேவாக் இந்தத் தொடரில் விளையாடாதது ஏமாற்றமே என்றார்.
இங்கிலாந்து அணி குறித்துப் பேசிய டோனி, மிகச்சிறந்த வீரர்கள் அடங்கிய அணி. அவர்கள் தொடர்ச்சியாக ரன் குவித்து வருகின்றனர்.
இருப்பினும் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். மேற்கிந்தியத் தீவுகள் மைதானத்தோடு ஒப்பிடும்போது, இங்கிலாந்து மைதானங்கள் சிறந்தவை. மேற்கிந்தியத் தீவுகளில் ரன் குவிப்பதும், பந்தை அடித்து ஆடுவதும் கடினமானது. ஆனால் இங்கிலாந்து மைதானங்கள் பெரிய அளவில் ரன் குவிக்க உதவும் என்றார்.
மும்பை குண்டுவெடிப்பு குறித்துப் பேசிய டோனி, அது மிகுந்த வருத்தத்துக்குரியது. இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது. மும்பை மக்கள் இந்தத் துயரத்தில் இருந்து விரைவில் மீண்டெழுவார்கள் என்று நம்புகிறேன் என்றார்.
டான்டனில் வெள்ளிக்கிழமை நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி, சோமர்செட் அணியை சந்திக்கிறது.
முதல் 2 போட்டிகளில் சேவாக் இல்லை: ஏமாற்றத்தில் டோனி
Monday, July 18, 2011
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment