ஜூலை 22 ல் வெளிவருகிறது இந்தி சிங்கம்

Tuesday, July 19, 2011


தமிழில் சூர்யா நடித்து வெற்றிகரமாக ஓடிய ”சிங்கம்” படம் இந்தியில் அதே பெயரில் தயாராகியுள்ளது.
இந்தப் படத்தின் நாயகன் அஜய் தேவ்கன். நாயகி பாலிவுட் நடிகை என்பதில் பெருமைப்பட்டுக் கொள்ளும் காஜல் அகர்வால்.
ரிலையன்ஸ் மீடியா மற்றும் ஒடிஸ்ஸி மீடியா சார்பில் ஹயாத் ஷேக் தயாரித்துள்ள இந்தப் படம் வரும் ஜூலை 22 ம் திகதி இந்தியா முழுவதும் வெளியாகிறது.
தமிழகம் மற்றும் கேரளத்திலும் அதே திகதியில் இந்தப் படத்தை வெளியிடுகிறது ஒடிஸ்ஸி மீடியா. அஜய் தேவ்கனுடன் இணைவதில் ஒடிஸி மீடியா பெருமைப்படுகிறது.
இந்தப் படம் அதன் ஒரிஜினல் பதிப்பைப் பார்த்த தமிழக மக்களை நிச்சயம் மகிழ்விக்கும் என தெரிவித்துள்ளார் ஹயாத் ஷேக். ஹரியின் ”வேங்கை”, ராகவா லாரன்ஸின் ”முனி -2” படங்களின் வெளியீட்டாளரும் ஹயாத் ஷேக் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

IP
Blogger Widgets