கனடா வெளியிட்டுள்ள போர்க்குற்றவாளிகள் பட்டியலில் சிங்கலவர் இருவர்!

Friday, July 22, 2011

கனேடிய அரசாங்கம் வெளியிட்டுள்ள போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களின் பட்டியலில் இரு இலங்கையர்களின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஜெரோமி பெர்ணான்டோ மற்றும் குலதுங்க இலந்தாரிதேவகே ஆகிய இரு இலங்கையர்களே இந்த பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.


கனடாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இவர்களை கைது செய்ய உதவுமாறு கனேடிய எல்லை சேகவை முகவரகம் கேட்டுள்ளது. இவர்கள் மனிதாபிமான மற்றும் போர்க்குற்றங்களுக்கு எதிரான சர்வதேசசட்டத்தை மீறியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

போர்க்குற்றங்கள் அல்லது மனிதாபிமானத்திற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் கனடாவில் வாழ்கின்ற இலங்கையர் இருவர் உட்பட 30 பேரை கைது செய்வதற்கு கனேடிய அரசாங்கம் உதவி கோரியுள்ளது. கனடாவின் எல்லை சேவைகள் இணையத்தளத்தில் போர்க்குற்றத்தில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் 30 பேரினது விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இவர்களுக்கு எதிராக ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட நாடு கடத்தல் உத்தரவு நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இவர்களை கைது செய்ய உதவுமாறு கனேடிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் விக் டெளவ்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை கனடாவில் சட்டவிரோதமான முறையில் குடியுரிமையை பெற்றுள்ள 1800 பேரின் குடியுரிமைகள் பறிக்கப்படவுள்ளதாக கனேடிய குடிவரவுத்துறை அமைச்சர் ஜேசன் கென்னே தெரிவித்துள்ளார்.

0 comments:

IP
Blogger Widgets