கனடா 25 பெரு நகரங்களின் பொருளாதாரத்தில் முதன்மை நகரமாக டொறண்டோ உள்ளது. துடிப்பு மிக்க தொழிலாளர் மற்றும் வீட்டு சந்தை மதிப்பு அதிகரிப்பின் காரணமாக டொறண்டோ பொருளாதாரம் அதிகரித்து உள்ளது.
சி.ஐ.பி.சி வங்கியின் சமீபத்திய பெரு நகர பொருளாதார ஆய்வில் இந்த உண்மை தெரியவந்துள்ளது. டொறண்டோ நகரம் பல்வேறு துறைகளில் நல்ல லாபத்தை ஈட்டி வருவதாலும் அந்த நகர பொருளாதாரம் முதன்மை இடத்தை பிடித்து உள்ளது என சி.ஐ.பி.சி.யின் தலைமை பொருளாதார நிபுணர் பெஞ்சமின் தால் தனது ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.
கனடா பொருளாதாரத்தின் கடுமையான வளர்ச்சிக்கும் தேசிய சராசரி வளர்ச்சிக்கும் பெரிய இடைவெளி ஏற்பட்டு உள்ளது. கனடாவில் உள்ள 25 முக்கிய நகரங்களின் பொருளாதாரத்தை ஆய்வு செய்த போது டொறண்டோ முதலிடம் பிடித்து இருப்பது தெரியவந்தது.
கடந்த 2 ஆண்டுகளாக பொருளாதார வளர்ச்சியில் இந்த நகரம் நல்ல முன்னணியில் இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டின் முதல் கால் இறுதியில் 2 சதவீத வேலை வாய்ப்புகள் உருவாகின.
இந்த வேலை வாய்ப்பில் 80 சதவீதம் உயர் பணி இடங்கள் ஆகும். இந்த பணி இடங்களும் முழு நேர பணி இடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு ரியல் எஸ்டேட் உச்ச நிலையில் காணப்பட்டது. வீட்டு விலைகள் இரு மடங்காக அதிகரித்தன. இதன் காரணமாகவும் டொறண்டோ பொருளாதாரம் முதலிடத்தை பெற்றது.
கனடா பெரு நகரங்கள் பொருளாதார பட்டியலில் 2வது இடத்தை ஒண்டோரியாவின் கிட்சனர் பெற்றுள்ளது. 3வது இடம் வின்னிபெக்கிற்கும், 4வது இடம் ரெஜினாவுக்கும், 5வது இடம் மொன்றீயலுக்கும் கிடைத்து உள்ளன.
தற்போதைய பொருளாதார பட்டியலில் 5வது இடத்தை பெற்றுள்ள மொன்றீயல் கடந்த சி.ஐ.பி.சி பட்டியலில் முதல் இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
பொருளாதாரம் அதிகம் உள்ள நகரங்களின் பட்டியல்: டொறண்டோ முதலிடம்
Wednesday, July 20, 2011
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment