யாழ் நகரப் பகுதியில் அமைக்கப்பட்டு வருகின்ற நவீன சந்தை கட்டடத் தொகுதிக்கான ஒப்பந்தகாரர் தெரிவு திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டதை இன்று மாநகரசபையின் முன்னாள் ஆணையாளரும் தமிழரசுக் கட்சியின் பிரமுகருமான சி. வி. கே. சிவஞானம் அம்பலப்படுத்தியுள்ளார்.
இந்த மாநகரசபைக்காக விளம்பரம் கோரப்பட்டு குறித்த கொழும்பைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றிற்கு கட்டட ஒப்பந்தத்திற்கான விநியோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனாலும் மேற்படி பத்திரிகை அறிவித்தல் 9ம் திகதி 12ம் மாதம் 2010ம் ஆண்டு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் எஸ். எல். ரி. டெவெலப்மன் கோட் பிறைவெற் லிமிட்டட் என்ற நிறுவனம் ஒன்று 19.12.2010 என திகதியிட்டு விண்ணப்பித்துள்ளது. ஆனால் இந்த நிறுவனம் கடந்த 08.12.2010 அன்றே உத்தியோக பூர்வமாக கொழும்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது அறிவிக்கபடுவதற்கு 1 நாள் முன்னதாக திட்டமிட்ட வகையில் இவ்வாறு ஒரு நிறுவனத்தை தோற்றுவித்து அந்த நிறுவனத்தின் கீழ் கேள்விகளைப் பெற்று உரிய நடைமுறைகளைப் பின்பற்றாது மாநகரசபை மோசடிகளில் ஈடுபடுகின்றமை அம்பலமாகி இருப்பதை அவர் ஆவணங்கள் சகிதம் அம்பலப்படுத்தியுள்ளார்.
குறிப்பாக மாநகரசபையின் முறைகேடான கட்டடங்கள் தொடர்பாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்றையதினம் தள்ளுபடி செய்யப்பட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தாக்கல் செய்துள்ள இவ் வழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சட்டத்தரணி சுமந்திரன் லண்டன் சென்றுள்ளமையால் ஆஜராகியிருக்கவில்லை. சட்டத்தரணி ஆஜராகாமையைக் காரணங்காட்டி நீதிமன்று தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் மக்களுக்கு உண்மை நிலையை வெளிப்படுத்த வேண்டும் எனத் தெரிவித் சி. வி. கே. சிவஞானம் முறைகேடான நிறுவனம் ஒன்றை அவர்களே உருவாக்கி அதற்கு வேலைவாய்ப்பை வழங்கியமை இந்திய அரசின் ஸ்பெக்ரம் என்கின்ற சர்ச்சைக்குரிய நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட உத்தியை போன்றதாகும் என மேலும் தெரிவித்தார்.
யாழ் நகர நவீன சந்தை கட்டடத் தொகுதிக்கான ஒப்பந்தகாரர் தெரிவில் மோசடி - சி. வி. கே. சிவஞானம் அம்பலப் படுத்தியுள்ளார்.
Wednesday, July 20, 2011
Labels:
Breaking News
Posted by
Wel Come
at
11:36 PM
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment