கடிகாரம் என்பது அத்தியாவசியமான ஒன்று. அவசரமான உலகின் வேகத்தை அளவிடுகின்ற அற்புத கருவியாக கடிகாரம் விளங்குகிறது என்றால் அது மிகையல்ல.
இவ்வாறு இருக்கையில் கடிகாரங்களின் வடிவங்களும் புதிது புதிதாக வெளிவருகின்றன. ஜப்பானின் "டோக்கியோ பிளாஸ்" என்னும் கடிகார வடிவமைப்பு நிறுவனம் அண்மையில் புதிய வகை கடிகாரம் ஒன்றினை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
பார்ப்பதற்கு கைச்சங்கிலி போலிருக்கும். கையினை அழகுபடுத்துகின்ற கைச்சங்கிலி என்றே பார்ப்பவர்கள் நினைப்பார்கள்.

சங்கிலிக் கோர்வையின் இடையில் பொருத்தப்பட்டிருக்கின்ற சிறிய LED திரைகளிலேயே இந்த நேரம் தென்படும் விதத்தில் வடிவமைத்திருக்கிறார்கள்.
130 அமெரிக்க டொலர்கள் பெறுமதியில் இந்த கடிகாரங்கள் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.


0 comments:
Post a Comment