பிபாஷா - ஜான் ஆப்ரஹாம் காதலில் முறிவு

Friday, July 22, 2011


பாலிவுட்டில் காதலனைப் பிரிந்த நாயகிகள் பட்டியல் பெரியது.
கிட்டத்தட்ட எல்லா பாலிவுட் நாயகிகளுக்கும் குறைந்த பட்சம் ஒரு காதல் தோல்வி, பிரிவு பின்னணியாவது இருக்கும்.

அந்தப் பட்டியலில் சேர்ந்திருப்பவர் பிபாஷா பாசு. நடிகர் ஜான் ஆப்ரஹாம் - பிபாஷாவும் கடந்த ஒன்பது ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இப்போது இவர்கள் காதல் முடிவுக்கு வந்துவிட்டது.
பிபாஷா - ஜான் காதலர்களாக இருந்தபோதே, பாலிவுட்டின் பிற நாயகர்களான சாயிப் அலிகான் மற்றும் ரன்பீருடன் இணைத்துப் பேசப்பட்டார் பிபாஷா என்பது குறிப்பிடத்தக்கது. அப்போதெல்லாம் நிலை தடுமாறாமல் இருந்த பிபாஷா - ஜான் காதல் இப்போது பிரியக் காரணம் ஷாகித் கபூர் என்கிறார்கள்.
இருவரும் மிக நெருக்கமாக உள்ளதாக ஊடகங்களில் புகைப்படங்களுடன் செய்திகள் வர ஆரம்பித்துள்ளன. இதைத் தொடர்ந்து பிபாஷாவிடமிருந்து ஜான் விலகிவிட்டதாக செய்திகள் கூறுகின்றன.
இதுகுறித்து ஜான் ஆபிரகாமுக்கு நெருக்கமானவர்கள் கூறுகையில், ஜான் இப்போது எதையும் பேசும் நிலையில் இல்லை. காரணம் பிபாஷாவின் நடவடிக்கைகளால் அவர் மனம் வெறுத்துப் போயுள்ளார். இனி அவர் பிபாஷா இல்லை என்பது மட்டும் உறுதி என்கிறார்கள்.
இந்தக் காதல் முறிவு வேதனையால், படப்பிடிப்புகளை ரத்து செய்துவிட்டு தனிமையில் இருக்கிறாராம் ஜான் ஆபிரகாம்.

0 comments:

IP
Blogger Widgets