ஒரே நேரத்தில் பல தேடியந்திரங்களில் தேடுவதற்கு

Wednesday, July 20, 2011

ஒரே ஒரு தேடியந்திரம் போதும் என்றால் பெரும்பாலானோர் கூகுளே போதும் என்று இருந்து விடுவார்கள்.

ஆனால் கூகுள் பிரியர்கள் கூட சில நேரங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட தேடியந்திரங்களில் தேடிப்பார்க்க விரும்பலாம். ஒப்பீட்டு நோக்கில் பல தேடியந்திர முடிவுகளை பக்கத்தில் வைத்து பரிசீலித்து பார்க்க விரும்பலாம் அல்லது கூகுளில் சிக்காத தகவலை வேறு தேடியந்திரத்தில் வலை வீசி பார்க்க நினைக்கலாம்.
இப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட தேடியந்திரங்களில் தேடிப்பார்க்க விரும்புகிறவர்களுக்கு உதவுவதற்காக என்றே பல தேடியந்திரங்கள் இருக்கின்றன. முக்கிய தேடியடந்திரங்களான யாஹு, பிங் மற்றும் கூகுளை ஒப்பிட்டு பார்க்க உதவும் தேடியந்திரங்களும் இருக்கின்றன.
அந்த வகையில் மை ஆல் சர்ச் என்னும் தேடியந்திரம் ஒரே நேரத்தில் எல்லா தேடியந்திரங்களிலும் தேடிப்பார்க்கும் வசதியை தருகிறது. ஒரே கிளிக்கில் முன்னணி தேடியந்திரங்களில் தேடிப்பாருங்கள் என்று அழைப்பு விடுக்கும் இந்த தேடியந்திரம் அதனை கச்சிதமாக நிறைவேற்றி தருகிறது.
இதன் தேடல் கட்டத்தில் தேடலுக்கான குறிச்சொல்லை டைப் செய்ததுமே தேடல் முடிவு பக்கங்கள் வந்து நிற்கின்றன. எதிர்பார்க்க கூடியது போல முதலில் கூகுள் தேடியந்திர முடிவுகள் தோன்றுகின்றன.
அதற்கு மேலே யாஹு, பிங், ஆஸ்க், லைகோஸ், டக்டக்கோ உள்ளிட்ட தேடியந்திரங்களுக்கான இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளன. எந்த தேடியந்திரம் தேவையோ அதனை கிளிக் செய்தால் அதற்கான முடிவுகளை பார்க்கலாம். இப்படி வரிசையாக ஒவ்வொரு தேடியந்திரமாக தேடிப்பார்க்கலாம்.
செய்திகளில் தேட விரும்புகிறோமா அல்லது புகைப்படம், வீடியோ போன்றவற்றை குறிப்பிட்டு தேட விரும்புகிறோமா என்றும் தீர்மானித்து கொள்ளலாம். முகப்பு பக்கதிலேயே இதற்கான வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
இணையதள முகவரி

0 comments:

IP
Blogger Widgets