டெஸ்க்டொப்பை பகிர்ந்து கொள்ள உதவும் இணையம்

Wednesday, July 20, 2011

உங்கள் டெஸ்க்டொப்பின் தோற்றம் அழகாக இருப்பதை நீங்கள் மட்டும் பார்த்து ரசித்து கொண்டிருந்தால் மட்டும் போதாது. அதை உலகோடு பகிர்ந்து கொண்டால் நன்றாகத் தான் இருக்கும்.

டெஸ்க்டொப்.லே சேவை இதை தான் செய்கிறது. இந்த சேவையின் மூலம் டெஸ்க்டொப் பிரியர்கள் தாங்கள் பயன்படுத்தும் ஸ்கிறீன்சேவர் சித்திரத்தை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.
இதில் உறுப்பினராவது மிகவும் சுலபம். உறுப்பினரானவுடன் ஸ்கிறீன்சேவர் தோற்றத்தை பகிர்ந்து கொள்ளலாம். மற்றவர்கள் அதனை பார்த்து கருத்து தெரிவிக்கலாம். பிரதானமாக மேக் கணணிகளுக்கான சேவை என்றாலும் மடிக்கணணிகள் டெஸ்க்டொப் என எல்லாவற்றிலிருந்தும் பகிர்ந்து கொள்ளலாம்.
உறுப்பினர்கள் தங்களுக்கான சுருக்கமான அறிமுகத்தையும் உருவாக்கி கொள்ளலாம். ஸ்கிறீன்சேவை தோற்றங்களை பகிர்ந்து கொள்வதோடு புதிய ஸ்கிறீன்சேவர் தோற்றங்களையும் சுலபமாக அறிமுகம் செய்து கொள்ளலாம்.
ஸ்கிறீன்சேவர் சித்திரங்கள் அழகின் அடையாளம் மட்டும் அல்ல. ஒருவிதத்தில் அவை அதனை பயன்படுத்துபவர்களின் தனிப்பட்ட குணாதிசயத்தை பிரதிபலிக்க கூடியவை. எனவே இந்த சேவை மூலம் புதுமையான ஸ்கிறீன்சேவரை மட்டும் அல்ல அவற்றின் பின்னே உள்ள நபர்களையும் அறிமுகம் செய்து கொள்ளலாம்.
இணையதள முகவரி

0 comments:

IP
Blogger Widgets