ஐ.பி.எல். நிதி முறைகேடு தொடர்பாக முன்னாள் கிரிக்கட் வீரரும், ஐ.பி.எல். நிர்வாகக் குழு உறுப்பினருமான ரவி சாஸ்திரிக்கு அமலாக்கப் பிரிவு இயக்குனரகம் சம்மன் அனுப்பியுள்ளது.
அவரை அடுத்த வாரம் மும்பையில் உள்ள தங்கள் அலுவலகத்தில் ஆஜராகுமாறு அமலாக்கப் பிரிவு இயக்குனரகம் தெரிவித்துள்ளது. அவர் இப்போது வெளிநாட்டில் உள்ளார்.
ஐ.பி.எல். முறைகேடு தொடர்பான வழக்கில் விசாரணை நடத்தி வரும் தங்களுக்கு உதவும் வகையில் ஐ.பி.எல். போட்டி தொடர்பான சில கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு அவரை அமலாக்கப் பிரிவு இயக்குனரகம் கேட்டுக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
ஐ.பி.எல். முன்னாள் ஆணையரான லலித் மோடி, ஐ.பி.எல். அணி உரிமையாளர்கள் ஆகியோர் அன்னிய செலாவணி மேலாண்மை சட்டத்தை மீறியது தொடர்பாகவும் அமலாக்கப் பிரிவு இயக்குனரகம் விசாரணை நடத்தி வருகிறது.
ஐ.பி.எல். நிதிமுறைகேடு: ரவி சாஸ்திரிக்கு அமலாக்கப் பிரிவு சம்மன்
Sunday, July 24, 2011
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment