இதில் படத்தின் நாயகன் கரண், நாயகி அஞ்சலி, இயக்குநர் வடிவுடையான் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
இதில் ஹீரோ கரணை தொடர்ந்து பேசிய நடிகை அஞ்சலி, இந்தப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் கன்னியாகுமரி, நாகர்கோயில் போன்ற பகுதிகளில் தான் படமானது.
தமிழ்நாட்டில் ஒரு காட்சி கூட படமாகவில்லை. அவ்வளவு பொருள் செலவு செய்து இப்படத்தின் சூட்டிங்கை நடித்தினார்கள் என பேச, குழுமியிருந்த பத்திரிகையாளர்களுக்கு ஒரே அதிர்ச்சி.
குமரி மாவட்டம் தமிழகத்தில் இல்லை என்கிறாரே அஞ்சலி, அவ்வளவு ஞான சூன்யமா அம்மணி என்பது தான் அதிர்ச்சிக்கான காரணம் என்பதை சொல்லவும் வேண்டுமா!
பொதுவாக நம்மூர் நடிகைகளுக்கு பொது அறிவு சற்று குறைவு என்பதை இந்த சம்பவமும் சொல்லாமல் சொல்லிவிட்டது என்று முணுமுணுத்தார் வயதான பத்திரிகையாளர் ஒருவர். |
0 comments:
Post a Comment