தமிழ் சினிமாவில் போட்டி போடும் நடிகைகள்

Sunday, July 24, 2011


தமிழ் சினிமாவில் முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடிப்பதை நாயகிகள் பெரிதும் விரும்புவர்.
இந்த நாயகிகள் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து நட்சத்திர அந்தஸ்த்தை தக்க வைத்து கொள்ள முயற்சிப்பார்கள்.
பாக்ஸ் ஆபிஸ் வெற்றி படங்களில் நடித்த ஹீரோக்களுடன் சேர்ந்து குஷ்பூ, சிம்ரன், ஜோதிகா, நயன்தாரா, தமன்னா போன்ற நடிகைகள் ரசிகர்களுக்கு பிடித்தமான கனவுக்கன்னியாக ஜொலித்துள்ளார்கள்.
கோலிவுட்டில் அனுஷ்கா, அமலா பால், கார்த்திகா, ஹன்சிகா மொத்வானி ஆகிய நடிகைகளும் ரசிகர்களின் 'கனவு கன்னி' பதவிக்கு போட்டியிடுகிறார்கள்.
இதில் அமலா பால், அனுஷ்கா, ஹன்ஷிகா மூவருக்கும் விரல்விட்டு எண்ணுகிற அளவில்தான் படங்கள் உள்ளன என்பதால் தற்போது வரையில் தமிழ் சினிமாவின் 'கனவு கன்னி' பதவிக்கு வரப்போகும் நடிகை யார் என்பதில் மர்மமும் பரபரப்பும் நிலவி வருகிறது.

0 comments:

IP
Blogger Widgets