பிரிட்டன் குழந்தைகள் அவர்களது பெற்றோர்களால் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவது அதிகரித்து உள்ளதாக தெரியவந்துள்ளது.
இக்குழந்தைகள் உலக குழந்தைகள் கடத்தல் தடுப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளாத நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள். 2010-11ஆம் ஆண்டு கால கட்டத்தில் 161 பிரிட்டன் குழந்தைகள் குடும்ப பிரச்சனை காரணமாக பெற்றோரால் கடத்தப்பட்டு உள்ளனர்.
முந்தய ஆண்டு இந்த குழந்தை கடத்தல் எண்ணிக்கை 146ஆக இருந்தது. அந்த நாடுகளில் இருந்து குழந்தைகளை மீண்டும் கொண்டு வருவதற்கு பிரிட்டன் அரசு போராட வேண்டி உள்ளது. குழந்தைகள் கடத்தப்படுவது குறித்து பிரிட்டன் அரசு உரிய ஆலோசனை வழங்கி உள்ளது.
பெரும்பாலான குழந்தைதகளை கடத்துவது பள்ளி நாட்களிலேயே நடைபெறுகிறது. தங்களது குழந்தையை அழைத்துக் கொண்டு சொந்த நாட்டிற்கு செல்லும் வாழ்க்கை துணை நபர் மீண்டும் குழந்தையை பிரிட்டன் கொண்டு வர மறுப்பது அதிகரித்து உள்ளது.
பாகிஸ்தான், தாய்லாந்து மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் பிரிட்டன் குழந்தைகள் கடத்திச் செல்லப்படும் பொதுவான பகுதிகளாக உள்ளன. கடந்த ஆண்டு 97 நாடுகள் சர்வதேச குழந்தைகள் கடத்தல் தொடர்பான 1980ம் ஆண்டு ஆவணத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.
இதனால் குழந்தைகள் கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டி உள்ளது என வெளியுறவுத்துறை அலுவலக அமைச்சர் ஜெர்மி பிரவ்னி தெரிவித்தார்.
கடந்த 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மற்றும் 2011ம் ஆண்டு இடையே பாகிஸ்தானுக்கு கடத்தப்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 24ல் இருந்து 21ஆக குறைந்தது. அதேபோன்று இந்தியாவுக்கு கடத்தப்படுவது 14ல் இருந்து 9ஆக குறைந்தது.
ஆனால் அல்ஜீரியாவுக்கு பூஜ்ய நிலையில் இருந்து 9ஆக அதிகரித்து உள்ளது. கடந்த 2008-09ம் ஆண்டில் 105 குழந்தைகள் கடத்தப்பட்டு உள்ளன.
பிரிட்டனில் பெற்றோர்களால் குழந்தைகள் கடத்தப்படும் அவலம்
Monday, July 18, 2011
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment