குருவாயூர் கோவிலுக்கு பிருத்விராஜ் வெண்ணை துலாபாரம் அளித்தார்

Tuesday, July 19, 2011


பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ், தமிழ் சினிமாவில்  ”மொழி”, ”சத்தம் போடாதே”,  ”ராவணன்” உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் இவருக்கும், டெலிவிஷன் நிருபர் சுப்ரீயாவுக்கும் திருமணம் நடந்தது. இதையொட்டி நேற்று காலை அவர் தனது மனைவியுடன் குருவாயூர் சென்றார்.
7 மணி அளவில் குருவாயூரப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் தனது எடைக்கு சமமாக வெண்ணை துலாபாரம் செய்தார்.
அதற்காக 95 கிலோ வெண்ணைக்கு கோவில் அலுவலகத்தில் ரூ.19,005 செலுத்தினார்.
பூஜை மற்றும் வழிபாடு முடிந்தவுடன் கோவில் உதவி மேலாளர் நந்தகுமார் நடிகர் பிருத்விராஜ், அவரது மனைவி சுப்ரீயாவுக்கு ஆசி வழங்கினார்.

0 comments:

IP
Blogger Widgets