குழந்தைகளின் அறிவை வளர்க்க கூடிய இணைய உலவி

Wednesday, July 20, 2011

இணையத்தில் தீய விடயங்களை தவிர்த்து உங்கள் சுட்டி குழந்தைகளுக்கு நல்ல பல பயனுள்ள பல தகவல்கள் மற்றும் விளையாட்டுக்களை தருவதற்காக ஒரு இணைய உலவி உள்ளது.

அதன் பெயர் TWEENS BROWSER. மேலும் ஓர் பாதுகாப்பான இணைய உலவியாகவும் திகழ்கிறது. குழந்தைகளை மிகவும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இணைய உலவியில் காட்டூன் மற்றும் புகைப்படங்களுடன் ஏராளமான பயனுள்ள இணைய தளங்களை தொகுத்து வைத்துள்ளார்கள்.
இந்த பிரவுசரில் செய்திகள், கண்டுபிடிப்புக்கள், விலங்குகள் பற்றிய விபரங்கள், விளையாட்டுக்கள், பாடல்கள், கல்வி கற்பதற்கான தளங்கள், விளையாட்டு செய்திகள், திரைப்படங்கள் என பல தலைப்புகளில் குழந்தைகளுக்கான இணைய தளங்களை தருகிறது இந்த உலவி.
எனவே உங்கள் குழந்தைகள் கல்வியிலும் அறிவிலும் சிறந்து விளங்க இந்த இணைய உலவி உதவும்.

0 comments:

IP
Blogger Widgets