இங்கிலாந்து தொடரில் சிறப்பாக விளையாடுவதே இலக்கு: காம்பீர்

Thursday, July 21, 2011

இந்திய அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான காம்பீர் காயம் காரணமாக வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரில் விளையாடவில்லை.

ஐ.பி.எல். போட்டிக்கு கொடுத்த முக்கியத்துவமே இதற்கு காரணம் என்று அவர் மீது கடுமையாக விமர்சனம் எழுந்தது. இதன் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடுவதே இலக்கு என்று அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது, நான் எனது திறமையை தற்போது களத்தில் நிரூபிக்க வேண்டிய நிலையில் உள்ளேன். எனது நேர்மை குறித்து கேள்வி எழுப்புவதை விரும்பவில்லை. இங்கிலாந்துக்கு எதிராக சிறப்பாக ஆடுவதை லட்சியம் என்றார்.

0 comments:

IP
Blogger Widgets