ஹிந்த ராஜபக்சவினை விரட்டிய தமிழர்களுக்கு மீண்டும் ஒரு பலப் பரீட்சை

Saturday, July 16, 2011

தொடர்ச்சியான திட்டமிடலுடன் இலங்கை சில நிகழ்வுகளை ஒழுங்கு செய்துள்ளது.; 23ம் திகதி கறுப்பு ஜூலை தினத்திற்கு அனைத்து தமிழர்களும் ஒன்று கூடுவார்கள் என்பது இலங்கை அரசிற்கு தெரியும். எனவே அதற்கு முதல் நாட்களிலோ அல்லது முடிந்த பின்னரோ தமிழ் மக்களை இலங்கை அரசிற்கெதிராக ஒன்று திரட்டுவது கடினம் என நினைத்தது இலங்கை அரசு. எனவே தான் இவ்வாறான நாட்களில் தனது நிகழ்ச்சி நிரலை தொகுத்துள்ளது. 17ம் திகதி சனல் 4க்கு எதிரான போராட்டம் 18ம் திகதி ரணிலும் சமல் ராஜபக்சவும் பிரித்தானியா வருதல். 24ம் திகதி பொதுநலவாய நாடுகளின் சந்திப்பு. இவ்வாறாக நிகழ்ச்சி நிரலை தொடர்ச்சியாக தொகுத்துள்ளதின் காரணத்தினை தமிழ் மக்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.


எவ்வாறாயினும் புலம் பெயர் தமிழர்களின் பலத்தினை சிதைத்துவிட வேண்டும் என்பதற்கான செயற்பாடுகளை முன்னேடுப்பதற்காகவும் போர்குற்றம் மற்றும் தமிழின அழிப்பிற்கெதிரான விசாரணைகளில் இருந்து தப்பிப்பதற்கான பேச்சுகளை நடத்தவும் (ரணில் சமல் ராஜாபக்ச) 17ம் திகதி வருகின்றார்கள்.

இலங்கை அரசானது தமிழர்களை வன்முறையாளர்கள் என்றும் பயங்கரவாதிகள் எனவும் சித்தரித்து தமிழர்கள் மீதான அடக்கு முறைமையையும் நீண்டகால திட்டமிட்ட இன அழிப்புப் போரினையும் நடத்திக் கொண்டிருகின்றது. இவை தமிழர் வரலாற்றின் கொடூரமான வலி சுமந்த நினைவுகளாவும் தமிழினத்தின் மனதிலே நீங்காத வடுக்களாகவும் பொதிந்துள்ளன. காலத்தின் காயங்களாக இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பின் திறவுகோலாக இனக் கலவரங்களின் துண்டுதல்களும் உச்சக் கட்டங்களாக படுகொலைகளும் நடத்தப்பட்டுள்ளன. அந்நிய ஆதிக்கத்தின் வெளியேற்றத்தின் பின்னர் கட்டவிழ்த்து விடப்பட்ட தமிழினம் மீதான படுகொலைகள் இன அழிப்பிற்குச் சான்றுகள். இதற்கு தமிழினம் மட்டுமன்றி சர்வதேசமும் சாட்சியங்கள்.

ஊடகங்களையும; தன்னார்வ நிறுவனங்களையும் வெளியேற்றி தமிழினத்தை வேரோடு அழித்துவிட நினைத்த இனவாத அரசானது முள்ளிவாய்க்கால் படுகொலையின் இறுதி நாளில் மட்டும் 40000; மேற்பட்ட அப்பாவிப் பொது மக்களை படுகொலை செய்தது. இதற்கான ஆதாரங்கள் சர்வதேசத்திடம் உள்ள போதும் அவை அவற்றை வெளிப்படுத்தி இலங்கை மீதான விசாரணையினை மேற் கொள்ளாது மௌனம் காத்து வருகையில் இவை அனைத்தையும் மீறி ஊடக தர்மமாகிய உண்மை நிலையினை சனல் 4 தமிழினப் படுகொலையின் ஒரு பகுதியினை காட்சிப்படுத்தியிருந்தது.

இதை சிங்கள இனவெறி பிடித்த அரசானது இலங்கையில் தமிழர் மீது எவ்வாறு வெறித்தனமாக நடந்து கொண்டதோ அவ்வாறே புலம் பெயர் தேசங்களிலும் நடந்து கொள்ளப் பார்க்கின்றது. தமிழர் மீதான இன அழிப்பின் புதிய பாகமாக புலம் பெயர் தமிழ் மக்களையும் அழித்துவிட வேண்டும் என நினைத்து அதற்கான செயற்பாடுகளில் இறங்கியுள்ளது.

இதன் ஒரு கட்டமாக பிரித்தானியாவில் 17ம் திகதி நீதிக்குப் புறம்பான முறையில் சனல் 4 எதிராக ஆர்ப்பாட்டமொன்றை நடத்தி இன அழிப்பு தொடர்பாக வெளி வருகின்ற உண்மைகளை முடக்கப் பார்க்கின்றது. உண்மையைச் சொல்லப் போனால் இது சனல் 4 இற்கு எதிரான ஆர்பபாட்டமல்ல. இது தமிழ் மக்களின் பலத்தினையும் ஒற்றுமையினையும் பரிசோதித்துப் பார்க்கின்ற ஒரு பலப் பரீட்சையாகவே பார்க்கப்பட வேண்டும். ஏனெனில் கிரிகெட் புறக்கணிப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களை எச்சில் துப்பி அவமதித்ததும் 350000 ற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் வாழ்கின்ற பிரித்தானியாவில் 6000 சிங்கள மக்கள் வாழ்வதும் இதில் எத்தனை பேர் இலங்கை அரசின் பொய்ப் பிரச்சாரத்திற்கும் தமிழின அழிப்பிற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தத் துணிவார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

உரிமைகளை இழந்து உயிர்களை இழந்து உடைமைகள் அழிக்கப்பட்டு இன அழிப்பிற்கு உட்படுத்தப்பட்டு அந்த வலிகள் மாறுமுன்னர் இலங்கை அரசின் செயலானது தமிழ் மக்களை கொதித்தெழ வைக்கும் என்பதில் சந்தேகமில்லை. அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட நிலையில் விடுதலைக்காக போராடிய ஒரு இனத்தினை கொடூரமாக படுகொலை செய்து அந்தப் பழியை தமிழர்கள் மேலே சுமத்தி புலத்திலும் தமிழினத்தின் உரிமைகளை பறிக்க நினைகின்றது இலங்கை அரசு.

தமிழர்கள் மீதான இன அழிப்பின் உண்மை நிலையினை சர்வ தேசத்திற்கு வெளிப்படுத்திய சனல் 4 க்கு எதிராக இலங்கை அரசின் கைக்கூலிகள் மூலம் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தத் துணிந்துள்ளது. எமது உரிமைக்காக குரல் கொடுக்கின்ற ஊடகங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டியது எமது கடமையாகும். எனவே அனைத்து தமிழர்களும் அன்று நடைபெறுகின்ற அனைத்து நிகழ்வுகளையும் நிறுத்து வைத்துவிட்டு இலங்கை அரசு ஒழுங்கு செய்த இந்தப் போராட்டத்திற்கு எதிராக அணி திரள வேண்டும். புலத்தில் எமது ஒற்றுமையினையும் பலத்தினையும் இலங்கை அரசுக்கெதிராக காட்டுவோம்.

உறவுகளே எவ்வாறாயினும் இலங்கை அரசின் சதித் திட்டங்களை விளங்கிக் கொண்டு இந்த மூன்று தினங்களிலும் இனவெறி பிடித்த இலங்கை அரசிற்கெதிராக ஒன்றுசேருவோம். தமிழன் வீரமிழந்து விட்டான் என்றும் மீண்டும் அடிமையாகி விட்டான் என்றும் கொக்கரிகின்ற இலங்கை அரசிற்கு மீண்டும் ஒரு பாடம் புகட்டுவோம் வாருங்கள். இது தொடர்பான எதிர்ப்புப் போராடங்களை ஒழுங்கு செய்யுமாறு அமைப்புக்கள் நிறுவனங்களைக் கேட்பதுடன் அவைக்கான முழு ஆதரவினை வழங்கி இந்தப் போராடத்திற்கு அணிதிரள்வோம்.

ஒன்றுபட்டு இன வெறியர்களை விரட்டியடிப்போம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

றொபேட்

0 comments:

IP
Blogger Widgets