அமெரிக்காவை தாக்க அல்கொய்தா தீவிரவாதிகள் திட்டம்: பாதுகாப்புத்துறை எச்சரிக்கை

Friday, July 22, 2011

அமெரிக்காவில் உள்ள ஆயிரக்கணக்கான பயன்பாட்டு அமைப்புகள் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு உள்ளனர்.
இந்த தாக்குதல் எச்சரிக்கையை அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புதுறை விடுத்து உள்ளது.

அல்கொய்தா தீவிரவாதிகள் சார்பில் அமெரிக்க பயன்பாட்டு அமைப்புகளில் சைபர் மற்றும் மனித தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம்.
அமெரிக்காவில் உள்ள உலக வர்த்தக மைய கட்டிடம் கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் திகதி அல்கொய்தா தீவிரவாதிகளால் தாக்கப்பட்டது. இந்த தாக்குதலின் 10வது நினைவு தினம் இந்த ஆண்டு வருகிறது.
அந்த நேரத்தில் அமெரிக்காவின் ரசாயனம் அல்லது எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளை தீவிரவாதிகள் தாக்க கூடும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து உள்ளது.
கடந்த மே மாதம் 2ம் திகதி அல்கொய்தா தீவிரவாத தலைவர் பின்லேடன் பாகிஸ்தான் அபோதாபாத் நகரில் அமெரிக்க கமாண்டோக்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அப்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்த போது அமெரிக்காவின் பல இடங்களை தாக்குதவதற்காக மேற்கொள்ளப்பட்ட விவரங்கள் கிடைத்து உள்ளன.
கடந்த ஆண்டு அல்கொய்தா இயக்கத்திற்காக தேர்வு செய்யப்பட்ட நபரை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்தனர். அந்த நபர் பென்சில்வேனியாவில் 5 அணு மின் நிலையங்களில் பணியாற்றி உள்ளார். எனவே அல்கொய்தா ஆட்கள் அமெரிக்க நிறுவனத்திலும் ஊடுருவி இருக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

0 comments:

IP
Blogger Widgets