ராம ராஜ்யம் படப்பிடிப்பின் இறுதிநாளில் நான் உணர்ச்சிவசப்பட்டு அழுதது உண்மைதான். ஆனால் சினிமாவிலிருந்து விலகப்போவதற்காக நான் அழுததாக அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டாம், என நயன்தாரா கூறியுள்ளார். நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளது. திருமணத்துக்கு பின் நயன்தாரா நடிக்க மாட்டார் என செய்தி பரவி உள்ளது.
தெலுங்கில் நயன்தாரா கடைசியாக நடித்த ராம ராஜ்ஜியம் படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் முடிந்தது. படப்பிடிப்பின் கடைசி நாளில் அவர் கதறி அழுததும், படக்குழுவினர் அனைவரிடமும் பிரியா விடை பெற்றதும் கடந்த வாரச் செய்திகள். இது அழுகையும் பிரியா விடையும் சினிமாவுக்கும் சேர்த்துதான் என்று கூறப்பட்டது. அப்போது செய்திகளுக்கு மறுப்பு தெரிவிக்காமல் இருந்த நயன்தாரா, இப்போது சினிமாவை நான்விலகமாட்டேன், என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
"நான் சினிமாவை விட்டு விலகப்போவதாக வந்த செய்தியில் உண்மையில்லை. ராம ராஜ்ஜியம் படப்பிடிப்பில் அழுததற்கான காரணமே வேறு. என்னையும் மீறி என் மன வேதனை கண்ணீராய் வெளிப்பட்டுவிட்டது. இன்னொரு பக்கம் ராம ராஜ்ஜியம் படப்பிடிப்பு குழுவினர் பாட்டு பாடி என்மேல் பூக்களை தூவி வழியனுப்பினார்கள். என் அழுகைக்கு அதுவும் ஒரு காரணம்.கடந்த ஆண்டு நான்நடித்த எல்லா படங்களும் சூப்பர் ஹிட். நான் எதற்கு விலகப் போகிறேன்", என்றார்.
எதுக்கும் பார்த்து பேட்டி கொடுங்க... அடுத்த செய்தி பிரபுதேவாவிடமிருந்து நயன் விலகல் என்று வரக்கூடும்!
அழுதது உண்மைதான்... ஆனா விலகறதா இல்ல - நயன்தாரா பல்டி (வீடியோ இணைப்பு)
Wednesday, July 20, 2011
Labels:
Breaking News
Posted by
Wel Come
at
11:28 PM
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment