இறந்த பின்னும் குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய தந்தை

Wednesday, July 20, 2011

கார்டியோ மயோபதி என்ற இதய நோய் தாக்கம் காரணமாக தந்தை ஸ்டூவர்ட் மார்ஷல் மரணம் அடைந்தார்.

இந்த வகை நோய் தாக்கம் காரணமாக இதயப் பகுதிகள் தடித்து பெருத்து விடும். இதய தசைகள் துடிக்கும் சூழலில் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் அபாயம் ஏற்படுகிறது.
கார்டியோ மயோபதி இதய நோய்கள் பாரம்பரிய நோய் ஆகும். எனவே மரணம் அடைந்த ஸ்டூவர்ட் மார்ஷலின் 4 குழந்தைகளுக்கும் இந்த இதய நோய் தாக்கம் உள்ளதா என மருத்துவர்கள் ஆராய்ந்தனர்.
இது குறித்து குழந்தைகளின் தாய் கரோலினிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு இதய பரிசோதனை செய்யப்பட்டது. இந்த மருத்துவ பரிசோதனையின் முடிவில் மகள் சல்லி அனே(14), ஜாக்குலின்(9) ஆகியோருக்கு இதய பாதிப்பு தொடர்பான பிரச்சனை இருந்தது தெரியவந்தது.
இதய நோய்களுக்கு வழிவகுக்கும் கட்டி வளர்ச்சியை தடுக்க மிகவும் ஆபத்தான ஓபரேஷன்கள் அவர்களுக்கு செய்யப்பட்டன. அவர்கள் 10 நாள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஸ்டூவர்ட் நோய் குறித்து சோதனை செய்யாதிருந்தால் இந்த சிறுவர்களுக்கு இதய நோய் பாதிப்பு பிரச்சனை தெரிந்து இருக்காது. 38 வயதில் ஸ்டூவர்ட் மார்ஷல் மரணம் அடைந்தாலும் தனது மரணம் மூலம் குழந்தைகளை காப்பாற்றி விட்டார்.
ஸ்டூவர்ட் இறப்பதற்கு இரண்டு ஆண்டுகள் முன்பாக அனே மிகவும் மோசமாக அவதிப்பட்டார் என கரோலின் நினைவு கூர்கிறார்.
ஸ்டூவர்ட்சின் இதர 2 குழந்தைகளாக டைலர் மற்றும் டிராய்க்கு எதிர்காலத்தில் பாரம்பரிய இதய நோய் பாதிப்பு உள்ளதா என சோதனை செய்ய வேண்டி உள்ளது.

0 comments:

IP
Blogger Widgets