ஓடியோ சீடியிலிருந்து பாடல்களை மட்டும் பிரித்தெடுக்க

Wednesday, July 20, 2011

ஓடியோ சீடியிருந்து பாடல்களை மட்டும் பிரித்தெடுக்க பல்வேறு மென்பொருள் உதவி செய்கின்றன.

அந்த வகையில் ஓடியோ சீடியில் இருந்து பாடல்களை பிரித்தெடுக்க அதிகமாக பயன்படுத்தப்படும் மென்பொருள் Mp3 to Ringtone Gold.
இந்த மென்பொருளை இலவசமாக நாம் குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். ஓடியோ சீடியில் இருந்து பாடல்களை பிரித்தெடுக்க இலவசமாக ஒரு மென்பொருள் உள்ளது.
இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணணியில் நிறுவிக்கொள்ளவும். பின் ஒருமுறை கணணியை மறுதொடக்கம் செய்து கொண்டு பின் இந்த மென்பொருளை ஒப்பன் செய்யவும்.
இப்போது ட்ரைவில் சீடியினை உள்ளிடவும். தற்போது பாடல்களை இந்த மென்பொருள் வாயிலாக காண முடியும். இப்போது வேண்டிய பாடல்களை தேர்வு செய்து கொண்டு பாடல்கள் சேமிக்கபட வேண்டிய இடத்தை குறிப்பிடவும். தற்போது வெளியீட்டு போர்மெட்டையும் தேர்வு செய்யவும். தற்போது Convert என்னும் பொத்தானை அழுத்தவும்.
சில மணி நேரங்களில் பாடல்கள் மாற்றம் செய்யப்பட்டு நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் சேமிக்கப்பட்டிருக்கும். அதை நீங்கள் வழக்கம் போல் பயன்படுத்தி கொள்ள முடியும். இதனால் ஓடியோ சீடிக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது.
தரவிறக்க சுட்டி

0 comments:

IP
Blogger Widgets