இந்திய அணியில் சேவாக் இல்லாதது மிகப் பெரிய இழப்பு: அவுஸ்திரேலிய வீரர் இயான்சேப்பல்

Thursday, July 21, 2011

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் பயிற்சி போட்டி ஜூலை 21ல் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.

இந்த தொடரில் காயம் காரணமாக சேவாக் இடம்பெறவில்லை. அவரது உடல் தகுதியை பொறுத்து 3 மற்றும் 4வது பயிற்சி போட்டியில் விளையாடுவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.
சேவாக் இல்லாதது இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என அவுஸ்திரேலிய முன்னாள் வீரர் இயான்சேப்பல் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறியதாவது: இந்தியா மிகப்பெரிய ஆயுதத்தை இழந்து வந்திருக்கிறது. பந்துவீச்சு திட்டங்களை தவிடுபொடியாக்க சேவாக் அளவிற்கு இந்த உலகில் எந்தவொரு துடுப்பாட்டக்காரரும் இல்லை.
எனவே அவர் இல்லாமல் இந்தியா விளையாடுவது கொஞ்சம் கடினமான காரியம்தான். அது இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த வழிவகுத்தாலும் ஆச்சரியமில்லை என்று தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஜான்எம்ப்ரே கூறுகையில்,"சேவாக் இல்லாமல் இந்தியா பலவீனமான அணி தான். தற்போது நம்பர்1 நிலையில் இருந்தாலும் பலமான இங்கிலாந்தை எதிர்கொள்ள சேவாக் வேண்டும். எனவே சேவாக் இல்லாதது இந்தியாவுக்கு பாதகமான அம்சம். அவரது அதிரடியை லார்ட்ஸ் ரசிகர்கள் இழந்துவிட்டனர்" என்றார்.

0 comments:

IP
Blogger Widgets