பாதிக்கப்பட்ட கோப்புகளை மிக இலகுவாக மீட்பதற்கு

Wednesday, July 20, 2011

பாதிக்கப்பட்டுள்ள மைக்ரோசாப்ட் வேர்டு, எக்ஸல், பவர்பாயிண்ட் கோப்புகளை பாதுகாப்பாக Text கோப்புகளாக மாற்றி மீட்கலாம். நமக்கு உதவுவதற்காக ஒரு மென்பொருள் உள்ளது.

சில சமயங்களில் நம்மிடம் இருக்கும் ஓபிஸ் கோப்புகள் ஏதாவது பிரச்சினை காரணமாக திறக்காமல் இருக்கும். இப்படி இருக்கும் கோப்புகளில் இருக்கும் தகவல்களை நமக்கு எளிதாக மீட்டு கொடுப்பதற்காக Corrupt office2txt என்ற இலவச மென்பொருள் உள்ளது.
இத்தளத்திற்கு சென்று Download Link என்று கொடுக்கப்பட்டிருக்கும் இணைப்பை சொடுக்கி மென்பொருளை நம் கணணியில் எளிதாக தரவிறக்கலாம். தரவிறக்கிய மென்பொருளை நம் கணணியில் நிறுவி இயக்கியதும் File என்பதை சொடுக்கி Open என்பதை தேர்ந்தெடுத்து பாதிக்கப்பட்டுள்ள கோப்பை தேர்ந்தெடுக்கவும்.
உடனடியாக பாதிக்கப்பட்டுள்ள கோப்புகளில் உள்ள Content நமக்கு Text Contentஆக Recover செய்து மாற்றி கொடுக்கப்படும். doc, docx, xls, xlsx, ppt, pptx, odt, ods, and odp போன்ற போர்மட்களுக்கு துணைபுரியும் வண்ணம் இந்த இலவச மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டு சரியாக தெரியாமல் இருக்கும் ஓபிஸ் கோப்புகளை திறப்பதற்கு இந்த மென்பொருள் உபயோகம் உள்ளதாக இருக்கும்.

0 comments:

IP
Blogger Widgets