இணைய உலகில் அதிகம் பேரால் விரும்பப்படும் பயன்படுத்தப்படும் உலாவியாக பயர்பொக்ஸ் இருந்து வருகிறது. ஆனால் கூகிள் வெளியிட்ட குரோம் உலவி தற்போது இதற்கு சவாலாக வந்து கொண்டிருக்கிறது.
இதன் வளர்ச்சியும் அபரிதமாக உள்ளது. பயர்பொக்ஸ் ரசிகர்களையும் மெல்ல மெல்ல இழுத்து பயர்பாக்சின் இடத்தைப் பிடிக்கும் வாய்ப்பு உள்ளதாக பேசப்படுகிறது.
குரோமின் வளர்ச்சிக்குக் காரணம் அதன் எளிமையான வடிவமைப்பும் அதன் வேகமும் தான். ஒரே கணிணியில் எத்தனை உலாவிகளை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்பது வேறு விசயம்.
பயர்பொக்ஸ் உலவியைப் பயன்படுத்துபவர்கள் குரோமின் இடைமுகத்தை விரும்பினால் அதற்கு ஒரு நீட்சி உள்ளது. இதன் பெயர் FxChrome. இதனை பயர்பாக்ஸ் உலவியில் நிறுவினால் பயர்பொக்ஸ் குரோமின் தோற்றத்தைப் போல மாறிவிடும். மெனுக்கள், டேப்கள், விண்டோக்கள், பட்டன்கள் போன்றவை குரோமில் இருப்பதைப் போல தோற்றமளிக்கும். ஆனால் நீங்கள் பயர்பொக்சில் தான் இருப்பீர்கள்.
குரோம் போலவும் வேண்டும் என வித்தியாசமாக நினைத்தால் உங்களுக்கு இந்த நீட்சி பயன்படும். ஆனால் இதனைப் போட்டு விட்டு குரோம் போல வேகம் வரவில்லை என்று சொல்லக் கூடாது. முக்கிய குறிப்பு என்னவென்றால் இந்த நீட்சி பயர்பொக்ஸ் பதிப்பு 4 இல் தான் செயல்படும்.


0 comments:
Post a Comment