MP3 கோப்புக்களின் தரத்தை மாற்றுவதற்கு

Wednesday, July 20, 2011

பெரும்பாலும் ஓடியோ கோப்புக்கள் MP3 வடிவிலேயே தற்போது அனைவராலும் உபயோகப்படுத்தப்படுகிறது.

நம்மிடம் சில MP3 ஓடியோ கோப்புக்கள் தரம் குறைந்து இருக்கும். அந்த வகை கோப்பை இயக்கும் போது சத்தம் குறைவாக கேட்பதுடன் கேட்பதற்கு ஸ்டீரியோ வசதி இன்றி(சற்று தொங்கலாக இருக்கும். பழைய சினிமா பாடல்களை கூட ஸ்டீரியோ இசையுடன் மாற்றி கேட்டு மகிழலாம் மற்றும் நமக்கு தேவையான மாற்றம் செய்து கொள்ளலாம்.
1. முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
2. தற்பொழுது உங்களுக்கு வரும் Zip கோப்பை Extract செய்து கொள்ளுங்கள்.
3. இப்பொழுது வரும் MP3 Quality Modifier என்ற கோப்பை ஓபன் செய்து கொள்ளவும்.
4. இந்த மென்பொருளை நாம் கணணியில் நிறுவச் செய்ய வேண்டியதில்லை. நேரடியாக இயக்கலாம்.
5. பின் தோன்றும் விண்டோவில் உங்கள் விருப்பம் போல மாற்றம் செய்ய வேண்டிய கோப்பை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
6. தேர்வு செய்த கொண்டவுடன் கீழே உள்ள வசதிகளை உங்களுக்கு ஏற்றவாறு மாற்றம் செய்து கொள்ளுங்கள்.
7. உங்களுக்கு தேவையான மாற்றங்களை செய்து கொண்டு மேலே உள்ள Process என்ற பட்டனை அழுத்தினால் போதும் உங்களுடைய MP3 கோப்புக்கள் புதிய தரத்துடன் உருவாகும்.
8. பின் தோன்றும் விண்டோவில் உங்களின் பழைய கோப்பின் அளவும் மாற்றம் செய்த கோப்பின் அளவும் மற்றும் எதனை சதவீதம் மாற்றம் செய்துள்ளது என்ற தகவல்களும் வரும்.
தரவிறக்க சுட்டி

0 comments:

IP
Blogger Widgets