சாதாரண புல் முதல் அதிபர் ஒபாமா வரை அனைத்து தகவல்களையும் தன்னகத்தே கொண்டிருக்கும் விக்கியின் புதிய பரிமாணம் தான் Qwiki.
அரிய பல தகவல்களையும் வீடியோக்களையும் கொண்டு நம் கண்களுக்கும் அறிவுக்கும் விருந்தளிக்கும் வகையில் Qwiki உள்ளது.
என்ன தகவல் வேண்டும் அதைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் கொடுப்பதற்காக உள்ள விக்கிப்பீடியாவில் வீடியோக்களை நாம் காண முடியாது. ஆனாலும் தகவல்களை அள்ளி கொடுக்கும். இந்தக் குறையைப் போக்கி கண்களுக்கு இனிய வீடியோவை கொடுக்க புதிய பரிமாணத்தில் வந்திருக்கும் தளம் தான் Qwiki.
இத்தளத்திற்கு சென்று Enter Topic என்ற கட்டத்திற்குள் எதைப்பற்றிய தகவல் வேண்டுமோ அதை தட்டச்சு செய்து Enter பொத்தானை சொடுக்க வேண்டும். அடுத்து வரும் திரையில் நாம் கொடுத்துள்ள தலைப்பிற்கு தகுந்தபடி உள்ள பல வீடியோக்களில் ஒவ்வொன்றாக சொடுக்கி பார்க்கலாம்.
இந்த Qwiki விக்கியில் மில்லியன் கணக்கில் பல வீடியோக்கள் உள்ளது. இனி நாம் தேடும் பல தகவல்களை வீடியோவுடன் பார்க்கலாம்.
இணையதள முகவரி
Qwiki: அனைத்து வகையான வீடியோக்களையும் பார்வையிடுவதற்கு
Wednesday, July 20, 2011
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment