இந்தியா - இங்கிலாந்து மோதும் 100 வது டெஸ்ட் போட்டி கொண்டாட்டம்: முன்னாள் கப்டன்கள் பங்கேற்பு

Friday, July 22, 2011

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று தொடங்கும் டெஸ்ட் போட்டி 100 வது டெஸ்ட் போட்டியாகும்.

இதையொட்டி போட்டி தொடங்குவதற்கு முன்னதாக டொஸ் போடும் நேரத்தில் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு வாரிய (பி.சி.சி.ஐ.) தலைவர் சஷாங்க் மனோகர், இங்கிலாந்து கிரிக்கட் வாரிய (இ.சி.பி.) தலைவர் கில்ஸ் கிளார்க் இருவரும் பரிசுகளை பரிமாறி வாழ்த்துத் தெரிவித்துக் கொள்கின்றனர். அதிலிருந்து 100 வது டெஸ்ட் போட்டி கொண்டாட்டம் தொடங்குகிறது.
தொடர்ந்து 4 வது நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளையின் போது மைதானத்தில் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதில் இருநாடுகளைச் சேர்ந்த முன்னாள் கப்டன்கள், வீரர்கள் ஆகியோர் இரு நாட்டு கிரிக்கட் வாரியங்களால் கவுரவிக்கப்படுகின்றனர். அதைத்தொடர்ந்து மைதானத்தில் முன்னாள் கப்டன்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும் அணிவகுப்பு நடைபெறுகிறது.
இதில் இந்தியாவின் முன்னாள் கப்டன்கள் ரவி சாஸ்திரி, சவுரவ் கங்குலி, இங்கிலாந்தின் முன்னாள் கப்டன்கள் இயான் போத்தம், பாப் வில்லிஸ், நாசர் உசேன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இவ்விரு அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி 1932 ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது.

0 comments:

IP
Blogger Widgets