லார்ட்ஸ் டெஸ்ட்டில் இந்திய அணிக்கு தலைமை வகிப்பது மிகப்பெரிய கவுரவம்: டோனி பெருமிதம்

Friday, July 22, 2011

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு தலைமை வகிப்பது மிகப்பெரிய கவுரவம் என்று இந்திய கப்டன் மகேந்திர சிங் டோனி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியது, லார்ட்ஸ் போட்டியில் இந்திய அணிக்கு தலைமையேற்றிருப்பது என் வாழ்வில் கிடைத்த மிகப்பெரிய கவுரவம். 120 கோடி மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கின்ற 15 வீரர்கள் கொண்ட இந்திய அணிக்கு தலைமை வகிப்பது பெருமையளிக்கிறது. அதே நேரத்தில் மிகப்பெரிய பொறுப்பும் உள்ளது.
அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெறுவது என்பது சாத்தியமில்லாதது என்றாலும், ரசிகர்கள் அதைத்தான் எதிர்பார்க்கின்றனர். வாய்ப்பு கிடைத்தால் இங்கிலாந்திலும் மோட்டார் சைக்கிளில் சவாரி செய்வேன். டெல்லி, மும்பையாக இருந்தால் அங்கு எனது மோட்டார் சைக்கிள், தலைகவசத்தை எடுத்து சென்று வலம் வந்திருப்பேன்.
2005 ம் ஆண்டு முதலே எனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட முடியவில்லை. அதிக நேரம் மும்பையில் உள்ள தாஜ் ஹொட்டலில் தான் இருக்கிறேன். சமீபத்தில் 100 வது முறையாக அங்கு சென்றேன். 400 நாள்களுக்கும் மேலாக அங்கு தங்கியுள்ளேன் என்றார்.

0 comments:

IP
Blogger Widgets