பாகிஸ்தானின் கராச்சி நகரில் நேற்று மீண்டும் கலவரம் வெடித்தது. இதில் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர் உட்பட 11 பேர் 24 மணிநேரத்திற்குள் கொல்லப்பட்டனர். பலர் காயம் அடைந்தனர்
பாகிஸ்தானின் கராச்சி நகர் கலவரத்திற்கு புகழ்பெற்றதாகி வருகிறது. கடந்த சில மாதங்களாக அங்கு வன்முறை தலைவிரித்தாடுகிறது. சமீபத்தில் அங்கு நடந்த கலவரத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
நிலவரம் கட்டுக்குள் வந்த ஒரு வாரத்திற்குள்ளேயே நேற்று மீண்டும் அந்நகரில் கலவரம் வெடித்துள்ளது. இதற்கு இருசம்பவங்கள் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.
கராச்சியின் குலிஸ்தான் இ ஜாகர் பகுதியில் ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தேசிய விமான நிறுவனப் பிரிவின் தலைவர் அமீர் ஷா, அவரது நண்பருடன் சேர்த்து மர்ம நபர்கள் சிலரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து கலவரம் பரவியது.
மேலும் கராச்சியில் கச்சி அமான் கமிட்டி என்ற அமைப்பு நடத்திய பேரணியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் புகுந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஏழு பேர் காயம் அடைந்தனர்.
கோபம் கொண்ட கமிட்டி ஆதரவாளர்கள் மவுரிபூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சில கடைகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன.
இதையடுத்து நடந்த கலவரத்தில் பால்டியா நகரில் 11 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவங்களால் எல்லைப் பாதுகாப்புப் படையினர், துணை நிலை ராணுவப் படையினர் என மொத்தம் 500 ராணுவ வீரர்கள் கராச்சி நகரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கராச்சியில் தொடரும் கலவரம்: 11 பேர் பலி
Monday, July 18, 2011
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment