புலிகளால் மூழ்கடிக்கப்பட்ட கப்பல்களின் சிதைவுகளை அகற்ற 2180 கோடி ரூபா செலவு

Sunday, July 24, 2011

காங்கேசன்துறை துறைமுகப் பகுதியில் புலிகளால் மூழ்கடிக்கப்பட்ட ஏழு கப்பல்களின் சிதைவுகள் உள்ள போதும் அவற்றில் ஆறு கப்பல்களின் சிதைவுகளை அகற்றவே உடன்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.



விடுதலைப் புலிகளால் மூழ்கடிக்கப்பட்ட ஆறு கப்பல்களின் சிதைவுகளை அகற்ற இந்தியா 2180 கோடி ரூபாவை செலவிடவுள்ளது.


ஆனால் ஏழு கப்பல்களின் சிதைவுகள் அங்கு காணப்படுவதாக சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.



இவற்றில் விடுதலைப் புலிகளின் கண்ணிவெடியில் சிக்கி மூழ்கிய சீ டான்சர் என்ற கப்பல் உள்ளடக்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.

காங்கேசன்துறைத் துறைமுகத்தின் நுழைவாயிற் பகுதியில் காணப்படும் இந்தக் கப்பலின் சிதைவுகளில் எம்வி மாகோ என்ற சரக்குக் கப்பல் முன்னர் ஒருமுறை சிக்கிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

துறைமுகப் பகுதியில் சிறிலங்கா கடற்படையின் எடித்தாரா, ஒரு இழுவைப்படகு போன்றவற்றின் சிதைவுகளும் துறைமுகத்துக்கு மிகநெருக்கமான பகுதியல் காணப்படுவதாகவும் சிறிலங்கா படை வட்டாரங்கள் கூறியுள்ளன.

ஆனால் ஆறுகப்பல்களின் சிதைவுகளை அகற்றவே இந்தியாவுடன் சிறிலங்கா உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments:

IP
Blogger Widgets