வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து யாழ்ப்பாணத்தில் இருக்கும் மக்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக கூறி பிரச்சாரத்திற்கு அழைக்கப்பட்ட மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர்.
கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற தேர்தல் கூட்டத்திற்கு இவ்வாறு மக்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
கோப்பாய், புத்தூர், ஆவரங்கால், அச்சுவேலி உட்பட பல பகுதிகளில் ஒவ்வொரு கிராம சேவை உத்தியோகத்தர்கள் ஊடாகவும் இலக்கங்கள் எழுதப்பட்ட துண்டுகள் வழங்கப்பட்டது.
இன்று கோப்பாயில் வைத்து வன்னியில் இருந்து மீள்குடியேறிய மக்களிற்கு 2500 ரூபா பணமும் உணவுப் பொதிகளும் வழங்கப்படவுள்ளதாக கூறி மக்கள் மக்களை பிரச்சாரக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளில் வயோதிபர்கள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.
ஜனாதிபதி உரையாற்றிய பின்னர் கூட்டம் நிறைவுபெற்றவுடன் மக்கள் அனைவரும் தங்களுக்கு 2500ரூபாவும் உணவுப்பொதியும் வழங்கப்படும் என எதிர்பார்த்திருந்தனர்.
கூட்டம் முடிந்ததும் ஜனாதிபதி உரையாற்றிவிட்டு சென்று விட்டார். அமைச்சர்கள் மற்றும் அங்கு வந்த பிரதேச செயலாளர் ஆகியோரும் வாகனங்களில் ஏறி சென்று விட்டனர். மக்கள் கிராம சேவை உத்தியோகத்தரை தேடிய போது அவர் அந்த இடத்திலிருந்து தலைமறைவாகியிருந்தார்.
அதன் பின்னர் மக்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டோமே என்ற கவலையுடன் வீடு திரும்பிள்ளனர். இதில் மிகக்சோகமான சம்பவம் ஒன்றையும் தாம் காணக்கூடியதாக இருந்ததாக இளம் குடும்பஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.
கூட்டம் முடிந்து வெளியேறி வந்த போது கூட்டம் நடந்த இடத்திற்கு வெளியே 75வயது வயோதிப பெண் ஒருவர் நடக்க முடியாது வீதி ஓரத்தில் விழுந்து கிடந்ததாகவும், ஏன் நீங்கள் இங்கு வந்தீர்கள் என கேட்ட போது தனக்கும் இலக்கம் எழுதப்பட்ட டோக்கன் துண்டு ஒன்று தந்ததாகவும், பெயர் எழுதப்பட்டவர்களே வர வேண்டும் என விதானையார் சொன்னதால் தான் இங்கு வந்தேன் என அந்த வயோதிபத்தாய் தெரிவித்தார்.
இக்கூட்டத்திற்கு வருகை தந்தவர்களில் பெருமளவானவர்கள் குழந்தைகளுடனும் மற்றும் வயது முதிர்ந்தவர்களும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களும் என தெரிவிக்கப்படுகிறது. கிராம சேவையாளர்கள் தங்களை ஏமாற்றி விட்டதாகவும் அவர்களுக்கு ஓட்டுப்போட மாட்டோம் என்று மக்கள் வீதிகளில் கூறிச் சென்றதை கேட்கக் கூடியதாக இருந்ததாக அங்கு சென்று திரும்பிய ஒருவர் தெரிவித்தார்.






2500 ரூபா பணம் தருவதாக கூறியதாலேயே மகிந்தவின் கூட்டத்திற்கு சென்றோம்- ஏமாற்றத்துடன் திரும்பிய மக்கள்! (படங்கள் இணைப்பு)
Wednesday, July 20, 2011
Labels:
Breaking News
Posted by
Wel Come
at
1:27 AM
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment