யாழ்ப்பாணத்தில் உள்ள ஈ.பி.டி.பியினர் தமது அலுவலகத்திற்கு மக்களை அழைத்து தமக்கு வாக்களிக்குமாறு கோருவதுடன் சேலை, சாரம், மற்றும் சிலருக்கு பணமும் வழங்குகிறது

வடக்கில் உள்ளூராட்சித் தேர்தல் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளதைத் தொடர்ந்து இலவசங்களை அள்ளி வீசும் படலமும் தொடங்கியுள்ளது.
யாழ். மாவட்டத்தில் சமுர்த்தித் திட்டப் பயனாளிகளில் தெரிந்தெடுக்கப்பட்ட 6,000 பேருக்கு இலவச சேலை மற்றும் சாரம் என்பனவற்றை அரசு வழங்கி உள்ளது

இவை தவிர நீர் இறைக்கும் இயந்திரம், மருந்து தெளிகருவிகள், தையல் இயந்திரம், மாணவர்களுக்குப் பாடசாலை உபகரணங்கள் என்பனவும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.
இவற்றில் இலவச சேலை, சாரம் என்பன தவிர்ந்த பொருள்கள்கள் ஏற்கனவே பிரதேச செயலகங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டவை என்று அதிகாரிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.
அமைச்சர்கள் கலந்துகொள்ளும் நிகழ்வுகளுக்கு மக்களைத் திரட்டும் நோக்கத்துடனேயே இலவச சேலை வழங்கப்படுவதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
விவசாய உள்ளீடுகள் தருவதாகத் தெரிவித்து தம்மை அழைத்த அரசியல் கட்சி ஒன்று யாழ்.நகரிலுள்ள தனது அலுவலகத்தில் வைத்து 3000 ரூபா பணம் வழங்கினர் என்று வலி.வடக்கு பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.
தமிழகத் தேர்தல் களத்தைக் கலக்கிய இலவசம் என்ற நோய் தற்போது வடக்கையும் தாக்கியுள்ளது என்று புத்திஜீவிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதேவேளை, இலவசங்களை அள்ளி வழங்கிய கருணாநிதி அரசையே தமிழக மக்கள் தூக்கி எறிந்தனர் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று கொழும்புப் பல்கலைக்கழக தமிழ்ப் பேராசிரியர் ஒருவர் கூறினார்.
வாக்களிக்குமாறு இலவசங்கலை அள்ளிவீசும் ஈ.பி.டி.பி மாஜ கண்ணன்! (படங்கள் இணைப்பு)
Wednesday, July 20, 2011
Labels:
Breaking News
Posted by
Wel Come
at
1:29 AM
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment