தனது 14 வயது மகள் தாயாகி உள்ளதன் மூலம் இளம் வயது தாத்தா என்ற பெருமையை பெற்றுள்ளார் இங்கிலாந்தை சேர்ந்த 29 வயது ஷெம் டேவிஸ்.
இங்கிலாந்தின் பிரிஜென்ட் பகுதியில் வசிப்பவர் ஷெம் டேவிஸ். மனைவி கெல்லியை விட்டு பிரிந்து மகள் தியாவுடன் வசித்து வருகிறார். காதலன் மூலம் கருவுற்ற தியாவுக்கு சமீபத்தில் குழந்தை. தாயும் சேயும் நலமாக இருப்பதாக கூறிய டேவிஸ் இதனால் தனக்கு மகிழ்ச்சியைவிட கவலையே அதிகம் என்றார்.
அவர் கூறியதாவது: இளம் வயதில் தாத்தாவாகி இருப்பது மகிழ்ச்சி தான் என்றாலும் என் மகளின் நிலையை நினைத்தால் வேதனையாக உள்ளது. குழந்தையை அவள் எப்படி வளர்க்கப் போகிறாள் என்ற கவலை அதிகரித்து வருகிறது.
நானும் என் 14 வயதில் தான் தந்தையானேன். வாழ்க்கையில் மிகவும் சிரமப்பட்டேன். குடும்பத்தில் பல பிரச்சனைகள் ஏற்பட்டு மனைவியை விட்டு பிரிந்தேன். என் தோழி மூலம் எனக்கு தற்போது 9 மாத மகன் இருக்கிறான். என்னால் முடிந்த உதவிகளை என் மகளுக்கு நிச்சயம் செய்யத் தயாராக இருக்கிறேன். அவளது சந்தோஷம் எனக்கு மிக முக்கியம்.
தியாவின் அம்மா கெல்லி கூறியதாவது: ஒவ்வொரு பெண்ணும் தன் மகள் தாயாவதை எண்ணி சந்தோஷப்படுவாள். ஆனால் என் மகள் தாய்மை அடைந்திருப்பது எனக்கு வருத்தத்தையே அளிக்கிறது. மிகச்சிறிய வயதில் பெரிய பொறுப்பை சுமக்க வேண்டிய கட்டாயத்தில் அவள் இருக்கிறாள்.
நானும் சிறிய வயதில்தான் மகளை பெற்றெடுத்தேன். 3 மாதத்தில் குடும்பம் பிரிந்துவிட்டது. நான் செய்த தவறை செய்யாதே என்று மகளுக்கு அறிவுரை கூறினேன்.
29 வயதில் தாத்தாவான இளைஞர்
Monday, July 18, 2011
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment