புற்றுநோய் சிகிச்சைக்காக சாவேஸ் மீண்டும் கியூபா பயணம்

Monday, July 18, 2011

புற்றுநோய் சிகிச்சை செய்து கொண்ட வெனிசுலா ஜனாதிபதி சாவேஸ் மீண்டும் கியூபாவுக்கு சிகிச்சை பெற செல்கிறார்.
இதற்காக தனது சில அதிகாரத்தை துணை ஜனாதிபதியிடமும், நிதித்துறை அமைச்சரிடமும் பகிர்ந்து அளித்தார்.

ஜனாதிபதியின் அனைத்து அதிகாரத்தையும் அவர் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதனை சாவேஸ் ஏற்கவில்லை.
தலைநகரத்தில் விமானத்தில் ஏறிய சாவேஸ் கூறியதாவது: நல்ல துடிப்புடன் இந்த சிகிச்சையை எதிர்கொள்கிறேன். நாளை எனக்கு கீமோதெரபி சிகிச்சை நடைபெறுகிறது. இது இறப்பதற்கான நேரம் அல்ல. வாழ்வதற்கான நேரம் என்றார்.
முன்னதாக கியூபா நாடாளுமன்றம் சாவேஸ் கியூபா சென்று சிகிச்சை பெறுவதற்கு அனுமதி அளித்தது. சாவேஸ் பதவி ஏற்று 12 ஆண்டுகள் ஆன நிலையில் முதன் முறையாக தனது அதிகாரத்தை பகிர்ந்து அளித்துள்ளார். இதனை அவரே குறிப்பிட்டார்.
ஜுலை 4ம் திகதி புற்றுநோய் சிகிச்சைக்கு பின்னர் நாடு திரும்ப சாவேஸ் மருத்துவர்கள் ஆலோசனைப்படி பணிகளை குறைத்துக் கொண்டார். உள்நாட்டில் சிகிச்சை எடுக்காமல் மீண்டும் சாவேஸ் கியூபாவுக்கு பயணம் மேற்கொண்டு இருப்பது சிலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
2012ம் ஆண்டி இறுதியில் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலிலும் சாவேஸ் போட்டியிட விரும்புகிறார். 12 ஆண்டுகளில் ஏழை மக்கள் மேம்பாட்டுக்காக பல சமூக திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். இருப்பினும் பணவீக்கம், வீட்டு விலை அதிகரிப்பு மற்றும் மின்பற்றாக்குறை ஆகியவை வெனிசுலாவில் பெரும் பிரச்சனைகளாக உள்ளன.

0 comments:

IP
Blogger Widgets