குடாநாட்டில் 36 பாடசாலைகளில் புதிய கட்டடங்கள் ஜனாதிபதியால் திறப்பு!

Friday, July 22, 2011

யாழ். குடா நாட்டில் 36 பாடசாலைகளின் கட்டிடங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று முன்தினம் திறந்து வைக்கப்பட்டன.

வட மாகாண மக்களின் கல்வித்துறை மேம்பாட்டை கருத்திற் கொண்டு ஒரு கோடி 30 இலட்சம் ரூபா இந்த திட்டத்திற்கென செலவிடப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள் முக்கிய அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு நேற்று முன்தினம் காலை 10 மணியளவில் ஒரே நேரத்தில் பாடசாலை கட்டிடங்களை திறந்து வைத்ததாக அவர் மேலும் தெரிவித்தார்

0 comments:

IP
Blogger Widgets