உலக புகழ் பெற்ற பாடகி ஜெனிபர் லோபஸ் திருமண நிகழ்ச்சியில் நடனம் ஆட ரூ.4.5 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார்.
உக்ரைன் நாட்டை சேர்ந்த தொழிலதிபர் செர்ஹி டரூட்டா(50). உலக பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து இடம் பிடித்து வருபவர்.
இவரது மகள் திருமணம் சமீபத்தில் நடந்தது. அமெரிக்க பொப் பாடகி ஜெனிபர் லோபஸ்(41) என்றால் டரூட்டாவுக்கு உயிர். மகள் திருமண நிகழ்ச்சியில் ஜெனிபரின் இசை, நடன நிகழ்ச்சி கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று விரும்பிய அவர் அதற்காக எவ்வளவு தொகை தரவும் தயார் என்று கூறினார்.
அவரது வேண்டுகோளை ஏற்ற ஜெனிபர் ரூ.4.5 கோடி வாங்கிக் கொண்டு கடந்த 19ம் திகதி திருமண நிகழ்ச்சியில் நடனம் ஆடினார்.
நீண்ட கால காதலரும் பாடகருமான மார்க் ஆன்டனியை ஜெனிபர் 2004ல் திருமணம் செய்தார். 2008ல் அவருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.
பின்னர் அவர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பிரிவதாக கடந்த 15ம் திகதி அறிவித்தனர். இதனால் சோர்வாக காணப்பட்ட ஜெனிபர் தற்போது மீண்டும் இசை நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்திருப்பதாக அவரது தோழிகள் கூறினர்.
திருமண நிகழ்ச்சியில் நடனமாட ரூ.4.5 கோடி சம்பளம் வாங்கிய ஜெனிபர்
Sunday, July 24, 2011
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment