நோர்வேயின் தலைநகரில் துப்பாக்கிச் சூடு: பலி எண்ணிக்கை 80 அதிகரிப்பு (வீடியோ இணைப்பு)

Sunday, July 24, 2011

நோர்வே நாட்டின் தலைநகரான ஆஸ்லோவில் ஆளும் கட்சி முகாம் ஒன்றில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பலியானோர் எண்ணிக்கை 80ஆக உயர்ந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

நோர்வே நாட்டின் ஆளும்கட்சியான லேபர் கட்சியின் இளைஞர் பிரிவு நடத்திய முகாம் ஒன்றில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
அங்கு மர்ம நபர்கள் சிலர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 80 பேர் பலியாகியுள்ளனர். இத்தகவலை ஆஸ்லோ பொலிஸ் இயக்குநர் ஆய்ஸ்டின் மேலண்ட் உறுதிபடுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,"ஆரம்பத்தில் 10 பேர் மட்டுமே இறந்ததாக கணக்கிடப்பட்டது. ஆனால் சம்பவ இடத்திலிருந்து மேலும் பல உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் பலி எண்ணிக்கை 80ஐ தாண்டியுள்ளது" என்றார்.

இந்நிலையில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக ஒருவரை நோர்வே பொலிஸ் கைது செய்துள்ளது. அவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கு முன்னதாக பிரதமர் அலுவலகம் அருகே நடந்த குண்டுவெடிப்பில் சிக்கி 7 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
மக்கள் நெருக்கடி மற்றும் உச்சகட்ட பாதுகாப்பு உள்ள இடத்தில் குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு நடந்திருப்பது நோர்வே மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது பயங்கரவாதிகளின் சதியா என்ற கோணத்தில் பொலிசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

0 comments:

IP
Blogger Widgets