உள்ளூராட்சித் தேர்தலில் வாக்களிப்பதற்கு தமது அடையாளத்தை நிரூபிப்பதற்கு கிளிநொச்சி மாவட்ட வாக்காளர்கள் பெரும்பாலானோரிடம் தேசிய அடையாளஅட்டை இல்லை என்று மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 61,217 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள போதும், அவர்களில் 60 வீதமானவர்களிடம் தேசிய அடையாளஅட்டை இல்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இவர்களில் பலர் தமது சொந்த இடங்களை விட்டு வந்து குடியேறியவர்கள் என்றும், ஏனையோர் பலமுறை இடம்பெயர்ந்ததால் தமது அடையாள ஆவணங்களை தொலைத்தவர்கள் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
அடையாள அட்டைகளை இழந்துள்ள இவர்களுக்கு தற்காலிக அடையாளஅட்டைகளை வழங்க தமது செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்கஅதிபர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை தற்காலிக அடையாளஅட்டையைப் பெறமுடியும் என்றபோதும், பெரும்பாலானோர் அதற்கு விண்ணப்பிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்காலிக அடையாள அட்டையை பெறுவதற்கு ஒளிப்படம் எடுப்பதற்கும், பேருந்து செலவுக்கும் 400 ரூபா தேவை என்றும் அந்தப் பணத்துக்கு தாம் எங்கே போவது என்றும் வாக்காளர்கள் கேள்வி எழுப்புவதாகவும் கிளிநொச்சி அரசாங்க அதிபர் மேலும் கூறியுள்ளார்.
கிளிநொச்சியில் 60 வீத வாக்காளரிடம் அடையாளஅட்டை இல்லை - மாவட்ட அரசஅதிபர் அதிர்ச்சித் தகவல்
Tuesday, July 19, 2011
Labels:
Breaking News
Posted by
Wel Come
at
4:49 AM
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment