65 உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் இன்று

Friday, July 22, 2011

65 உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் இன்று நடைபெற உள்ளது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவூகள் ஆரம்பமாகி பிற்பகல் 4 மணிவரை இடம்பெறும்.
ஒரு மாநகரசபை- 9 நகர சபைகள்- 55 பிரதேச சபைகளில் நடைபெறும் இந்தத் தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.
65 உள்ளுhராட்சி சபைகளிலும் இருந்து 875 உள்ளுhராட்சி சபை உறுப்பினர்கள் தெரிவூ செய்யப்பட உள்ளனர். இதற்காக 26 இலட்சத்து 30 ஆயிரத்து 985 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
தேர்தல் நடைபெறும் பிரதேசங் களிலுள்ள சகல மக்களும் வாக்களிப்பதற்கு ஏதுவாக 65 உள்ளுராட்சி சபைகளிலும் 2226 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதேவேளை 383 நிலையங்களில் வாக்குகளை எண்ணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் செய்தியாளர்களிடம் கூறினார்.
65 உள்ளுhராட்சி சபைகளில் கடுவெல மாநகர சபை- கெஸ்பாவ நகர சபை- மினுவாங்கொட நகர சபை- தலவாக்கலை - லிந்துல நகர சபை- வல்வெட்டித்துறை நகர சபை- பருத்தித்துறை நகர சபை- சாவகச்சேரி நகர சபை- சிலாபம் நகர சபை- எம்பிலிபிட்டிய நகர சபை ஆகியவற்றுடன் 55 பிரதேச சபைகளுக்கும் நாளை சனிக்கிழமை (23) தேர்தல் நடைபெறுகிறது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் 3 நகர சபைகள் மற்றும் 13 பிரதேச சபைகளுக்கு நடைபெற உள்ள தேர்தலில் 3 இலட்சத்து 74 ஆயிரத்து 30 வாக்காளர்கள் வாக்களிக்க   உள்ளனர். இந்த 16 உள்ளுராட்சி சபைகளுக்காக 201 உறுப்பினர்கள் தெரிவூசெய்யப்பட உள்ளனர்.
நுவரெலிய மாவட்டத்தில் தலவாக்கலை - விந்துல நகரசபைக்காக 9 உறுப்பினர்களை தெரிவூ செய்ய 4187 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். இம்முறை தேர்தலில் ஆகக்குறைந்த வாக்காளர்கள் எண்ணிக்கை தலவாக்கலை - லிந்துல நகர சபையிலேயே பதிவாகி உள்ளது.
இந்தத் தேர்தலில் 25 ஆயிரம் அதிகாரிகள் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படவிருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
25ஆயிரம் அதிகாரிகளில் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தேர்தல் வாக்களிப்பு நிலைய அதிகாரிகள் எனப் பலர் உள்ளடங்குவதாக அவர் கூறினார். யாழ்ப்பாண மாவட்டத்தில் மாத்திரம் 600 தேர்தல் அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படவூள்ளனர். யாழ்ப்பாணத்தில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படவூள்ள அதிகாரிகளில் 90 வீதமானவர்கள் ஆண்கள் என்றும் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம்இ பாதுகாப்பு நடவடிக்கை களுக்கு ஆயிரக்கணக்கான பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப் படவூள்ளதாக தேர்தல்களுக்குப் பொறுப் பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் காமினி நவரட்ண தெரிவித்துள்ளார்.
சிறு சிறு சம்பவங்கள் நடந்திருந்தாலும் நிலைமை சுமுகமாக இருக்கிறது. என்றாலும்இ பாதுகாப்பு பலமாகவே இருக்கிறது; பொலிஸாரின் ரோந்து நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டி ருப்பதாகவூம் காமினி நவரட்ன கூறினார்.

0 comments:

IP
Blogger Widgets