வாக்காளர் அட்டை கிடைக்காதவர்களும் வாக்களிக்க விசேட ஏற்பாடு!

Friday, July 22, 2011


வாக்காளர் அட்டை இன்று வரை கிடைக்காதவர்களும் வாக்களிப்பு நிலையத்துக்குச் சென்று தமது ஆள டையாளத்தை உறுதிப்படுத்தி வாக்களிக்க முடியூம் என்று பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி நேற்றுத் தெரிவித்தார்.
உள்ளுராட்சி சபைத் தேர்தலையொட்டிய சர்வகட்சி செயற்பாட்டு பிரிவூ இன்று காலை 6.30 மணி முதல் இராஜகிரியவிலுள்ள தேர்தல் செயலகத்தில் இயங்கும் எனவூம் அவர் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில் இன்று 65 உள்ளுhராட்சி சபைகளுக்கு வாக்களிப்பு இடம்பெறு கின்றது. இத்தேர்தலுக்கென இன்று வரையூம் வாக்காளர் அட்டை கிடைத் திராதவர்களும் வாக்களிக்க முடியூம்.
வாக்காளர் அட்டை கிடைக்கப்பெறாத வர்கள் இன்று காலையில் நேரகாலத்துடன் வாக்களிப்பு நிலையத்துக்குச் சென்று தங்களது ஆளடையாளத்தை உறுதிப்படுத்தி வாக்களிக்க முடியூம். தேர்தல் ஆணையாளரால் அங்கீகரிக்கப்பட்டுள்ள தேசிய அடையாள அட்டை- கடவூச்சீட்டு- தேர்தல் ஆணையாளரினால் வழங்க ப்படுகின்ற தற்காலிக அடையாள அட்டை- சாரதி அனுமதி பத்திரம் போன்றவாறான ஆளடையாளத்தை உறுதிப்படுத்தக்கூடிய ஆவணங்களைச் சமர்ப்பித்து வாக்களிக்க முடியூம் என்றார்.

0 comments:

IP
Blogger Widgets