விக்ரமின் நடிப்பை வியந்த அமலா பால்

Tuesday, July 19, 2011


இயக்குனர் விஜய் இயக்கியுள்ள ”தெய்வத்திருமகள்” படத்தில் விக்ரம், அனுஷ்கா ஆகியோருடன் அமலா பால் சின்ன கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
”தெய்வத்திருமகள்” படம் விக்ரமுக்கு முதல் தமிழ் படம் அல்ல. ஆனால், ஒரு புதுமுக நடிகரைப்போல அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்வம் காட்டியுள்ளார்.
அர்ப்பணிப்பு உணர்வோடு இந்த படத்தில் நடிப்பில் திறமையை காட்டியிருப்பார். அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம், பல விடயங்களை எனக்கு கற்று தந்துள்ளது.
படப்பிடிப்பு தளத்தில், அவருடைய கடுமையான உழைப்பை கண்டு வியந்துள்ளேன். உலக நாயகன் கமல்ஹாசன் மாதிரி விக்ரமும் தனது நடிப்பு திறனை வெளிப்படுத்தி, தனி முத்திரை பதிக்க கூடியவர் என்பதை ”தெய்வத்திருமகள்” படத்தின் மூலமாக அனைவரும் காண முடியும் என்று அமலா பால் தெரிவித்துள்ளாராம்.

0 comments:

IP
Blogger Widgets