நடிகை சரண்யா நாக் கூறியதாவது:
”யாத்தீ” படத்தை இயக்குனர் யாசிக் இயக்குகிறார்.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையாக அமைந்துள்ளது.
தெருக்கூத்தாடிகளுக்கும் கிராமத்தில் இருக்கும் சாதாரண பெண்ணுக்கும் ஏற்படும் நிகழ்வுகள், பிரச்னைகள் பற்றிய கதை.
முழுக் கதையும் என்னைச் சுற்றி நிகழ்கிறது. இந்தப் படம் என் நடிப்பின் இன்னொரு பரிணாமத்தைக் காட்டும்.
‘பேராண்மை’ படத்துக்காக பாண்டியன் மாஸ்டரிடம் தற்காப்பு கலைகளை கற்றேன்.
அதை அப்படியே விட்டுவிடாமல் தொடரலாம் என்று முடிவு செய்ததால் இப்போதும் சிலம்பம் கற்று வருகிறேன்.
இதை முடித்துவிட்டு களறி கற்க இருக்கிறேன். இவற்றை கற்பதன் மூலம் அக்சன் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் நடிப்பேன். |
0 comments:
Post a Comment