சிறப்பு அனுமதி பெற்ற போடிநாயக்கனூர் கணேசன்

Sunday, July 24, 2011


புதுமுகம் ஞானம் என்பவரின் படைப்பில் உருவாகிவரும் படம் 'போடிநாயக்கனூர் கணேசன்'.
இதில் ஹரிகுமார் கதாநாயகனாகவும், கதாநாயகியாக அருந்ததியும் நடிக்கின்றனர்.

இது குறித்து ஹரிகுமார் கூறியது: "தூத்துக்குடி, மதுரை சம்பவம்' போன்ற படங்களைத் தொடர்ந்து நான் நடிக்கும் படம் இது.
'மதுரை சம்பவம்' படத்துக்குப் பின் நிறைய கதைகளைக் கேட்டேன், எனக்கு எதுவும் பொருந்தி வரவில்லை. அதன் பின் கேட்ட இக்கதை மிகவும் பிடித்திருந்தது. எல்லோரும் ஏதோ ஒரு இடத்துக்காக போராடிக் கொண்டிருப்போம்.
சிலர் அந்த இடத்துக்கு சுலபமாக சென்று விடுவார்கள். சிலர் முட்டி மோதி தோல்வியைச் சந்தித்து வாழ்வின் அனுபவமாக அதை எடுத்துக் கொள்வார்கள். அப்படி ஒரு கதாபாத்திரம்தான் என்னுடையது.
எடுத்துக் கொண்ட முயற்சி வெற்றியா? தோல்வியா? என்பதுதான் திரைக்கதை. அதில் காதல், காமெடி, வழக்கமாக என் படங்களில் இருக்கும் ஆக்ஷன் என அனைத்தும் கலந்திருக்கும்.
போடி நகரின் புவியல் பின்னணியில் இதுவரை எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும், இப்படம் அதை விட்டு ஒரு படி மேலே போய் நிற்கும். போடியில் இது வரை படப்பிடிப்பு நடத்தப்படாத இடங்களில் சிறப்பு அனுமதியுடன் படத்தை நடத்தி முடித்திருக்கிறோம். வரும் 29-ம் தேதி படம் வெளிவருகிறது என்றார் ஹரிகுமார்.

0 comments:

IP
Blogger Widgets