சமீபத்தில் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் 'போல் பச்சன்' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.
இதில் இரு ஹீரோயின்கள், இன்னொரு ஹீரோயின் அசின். ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பே ஜெனிலியாவுக்கும், இப்படத் தயாரிப்பாளருக்கும் பிரச்னை தொடங்கியது.
என் திறமைக்கு ஏற்ற கதாபாத்திரம் இந்தப் படத்தில் இல்லை என பாலிவுட் மீடியாக்களில் சொன்னார். இந்த கருத்துக்கு தயாரிப்பு தரப்பு கோபமானது.
இப்பிரச்னையை பேசி தீர்க்க எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இதையடுத்து படத்திலிருந்து விலகி விட்டார் ஜெனிலியா. இப்படத்தில் அசினும் நடிப்பதால் அவருக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் தனது வேடத்தை மாற்றி அமைக்குமாறு ஜெனிலியா கூறி வந்தாராம். இப்பிரச்னையால்தான் அவர் படத்திலிருந்து விலகியுள்ளதாக தெரிகிறது. |
0 comments:
Post a Comment