இளவரசி கவர்ச்சி படம் அல்ல கலைப்படம்: ரீமா சென்

Thursday, July 21, 2011


தமிழ் சினிமா இணையதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் இன்று பிரதானமாக இடம் பெற்றிருப்பது நடிகை ரீமா சென்னின் ஆபாசமான காட்சிப் படங்கள் தான்.
என்ன படம் இது என்று பலரும் ஆர்வத்தோடு விசாரிக்க ஆரம்பித்துவிட்டனர்.
அந்த வகையில் இந்த விளம்பரத்தின் நோக்கம் நிறைவேறிவிட்டது. ஆனால் இவை தமிழ்ப் படக்காட்சிகள் அல்ல. ரீமா சென் முன்பு நடித்த ”இடி ஸ்ரீகந்தா” என்ற வங்க மொழிப் படத்தில் இடம்பெற்றுள்ளன.
இந்தப் படத்தில் பாலியல் தொழிலாளியாக அவர் நடித்துள்ளார். பாலியல் தொழிலாளி என்ற பிறகு ஆபாசக் காட்சி இல்லாமலா.
தாராளக் கவர்ச்சி காட்டி நடித்துள்ளார். 2004 ல் வெளியான இந்தப் படத்தை இப்போது தமிழில் ”இளவரசி” என மொழி மாற்றம் செய்து வெளியிடுகின்றனர். இதுகுறித்து ரீமா சென்னிடம் கேட்டபோது, இந்தப் படத்தில் எனக்கு விலை மாது கதாபாத்திரம். அதனால் ஒரு படுக்கையறைக் காட்சியில் நடித்தேன். அதற்காக ஏதோ நான் முழு நீள கவர்ச்சி படத்தில் நடித்தது போல பரபரப்பைக் கிளப்பி விட்டனர்.
இது கவர்ச்சி படமல்ல. நல்ல கலைப் படம் என்றார்.

0 comments:

IP
Blogger Widgets