அந்த பிரச்சார நிகழ்வில் இசை நிகழ்ச்சி நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த இசை நிகழ்ச்சியில் தமிழ் திரைப்பட பின்னணி பாடகர்கள் மனோ, கிரிஷ், சுசித்ரா ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.
இதனை ஏற்று 20.07.2011 அன்று காலை மூன்று பேரும் சென்னையில் இருந்து கொழும்பு சென்றடைந்தனர்.
மனோ உள்ளிட்ட மூன்று பேரின் பயணத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து மனோ உள்ளிட்ட மூன்று பேரும், ராஜபக்சேவுடன் பங்கேற்க இருந்த இசை நிகழ்ச்சியை ரத்துச்செய்துவிட்டு, கொழும்பு விமான நிலையத்தில் இருந்து சென்னை திரும்பினர்.
இந்த விடயம் தொடர்பாக பாடகர் மனோ Lankasri FM க்கு அளித்த பிரத்தியேக செவ்வியினை இங்கே கேட்கலாம்.
|
0 comments:
Post a Comment