எகிப்தில் மீண்டும் கலவரம்: பலர் படுகாயம்

Monday, July 18, 2011

எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள தாகிர் சதுக்கத்தில் புதிய மோதல்கள் வெடித்து உள்ளன. அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள் மற்றும் பொலிசார் இடையே கடுமையான சண்டைகள் நடைபெற்றன.

போராட்டத்தை கலைப்பதற்கு போராட்டக்காரர்கள் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தினார்கள். அப்போது பலர் பொலிசார் மீது கற்களை வீசினார்கள். தாகிர் சதுக்கம் கடந்த பெப்பிரவரி மாதம் துவங்கிய புரட்சி போராட்டத்திற்கு முக்கிய களம் ஆகும்.
இந்த போராட்ட களம் தான் எகிப்து முன்னாள் ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக் பதவி விலக காரணமாக அமைந்தது. முன்னாள் அதிபரின் அதிகாரிகள் மீதான விசாரணை விரைவுபடுத்தப்பட வேண்டும் என போராட்டக்காரர்கள் குரல் எழுப்பினர்.
இன்று காலை தாகிர் சதுக்க பகுதியின் வீதிகளில் கற்கள் உடைந்த கண்ணாடிகள், குப்பைகள் இறைந்து கிடந்தன. பல வாரங்கள் நடைபெற்ற மோதல்களில் இந்த மோதல் மிகவும் மோசமானது என நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
போராட்டத்தின் போது உயிர் துறந்த நபரின் குடும்பத்தினர் அரசு தொலைக்காட்சி அலுவலகம் முன்பாக அமர்ந்து போராட்டம் நடத்தினர். அவர்களை பொலிசார் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்த போது செவ்வாய்க்கிழமை மோதல் தீவிரமானது.
மோதல் தீவிரமானதை தொடர்ந்து பொலிசார் தற்காப்பு கேடயத்துடன் எதிர்பாளர்களை விரட்டினர். இந்த மாத துவக்கத்தில் எகிப்தின் முன்னாள் வர்த்தக துறை அமைச்சர் ராசிட் முகமதுவிற்கு 5 ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி முபாரக் ராணுவ மருத்துவமனையில் காவலில் உள்ளார். அவர் மீதான விசாரணை ஆகஸ்ட் 3ஆம் திகதி நடைபெறுகிறது. அவரது மகன்கள் அலா மற்றம் கமால் மீதும் விசாரணை நடைபெறுகிறது.
பெப்பிரவரி மாத போராட்டத்தில் போராடக்காரர்கள் மரணம் தொடர்பாக முபாரக் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

0 comments:

IP
Blogger Widgets