முதியவரின் வயிற்றில் 25 ஆண்டுகளாக இருந்த பல்குச்சிகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்

Monday, July 18, 2011

சுவீடன் நாட்டைச் சேர்ந்தவர் ஓவ்ஷோகல்பெர்க். 65 வயது முதியவரான இவர் கடந்த 25 ஆண்டுகளாக கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். எனவே மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்றார்.

ஒருமுறை அல்லது இருமுறை அல்ல. 100 தடவை மருத்துவரை சந்தித்து அதற்கான மருந்து மாத்திரை சாப்பிட்டார். இருந்தும் நோய் குணமாகவில்லை.
இதை தொடர்ந்து அவரது வயிற்றில் மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்தனர். அப்போது வயிற்றுக்குள் பல் குத்தும் குச்சி ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து மருத்துவர்கள் ஓபரேசன் செய்து வயிற்றுக்குள் இருந்த 6 சென்டி மீற்றர் நீளம் கொண்ட மரத்திலான பல் குச்சி அகற்றப்பட்டது.
இதை தொடர்ந்து அவரது வயிற்று வலி குணமாகி விட்டது. தற்போது வலி இன்றி நிம்மதியாக உள்ளார்.

0 comments:

IP
Blogger Widgets