கனடாவில் தபால் சேவை துவங்கியது: தொழிலாளர்கள் பிரச்சினைக்கு முடிவு எட்டப்படவில்லை

Monday, July 18, 2011

அரசாங்கம் தபால் ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து திங்கட்கிழமை முதல் தபால் பிரிப்பு பணிகள் துவங்கின.

இந்த தபால்கள் வீடுகளுக்கும், அலுவலகங்களுக்கும் செவ்வாய்க்கிழமை விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் தபால் பிரிப்பு பணியில் காணப்படும் தடைகளுக்கு தீர்வு காண ஊழியர்களுக்கு இன்னும் சில நாட்கள் ஆகும்.
கனடா தபால் ஊழியர்கள் தங்கள் பிரச்சினைக்கு தீர்வு இல்லாத நிலையில் மீண்டும் பணியை துவக்கி உள்ளனர். நீண்ட நாட்களாக தேங்கி கிடந்த தபால்களை பிரிப்பதற்கு 48 ஆயிரம் நகர்புற தபால் ஊழியர்கள் பணிக்கு வந்தனர்.
தபால் சேவை மீண்டும் மிக சுமூகமாக நடைபெற இன்னும் சில நாட்கள் ஆகும் என கனடா தபால் துறை  நிர்வாக செய்தி தொடர்பாளர் ஜான் ஹாமில்டன் தெரிவித்தார். தபால் ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக 11 நாட்கள் தபால் அலுவலகங்கள் மூடப்பட்டு இருந்தன.
நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் தரப்பில் உரிய முடிவு எட்டப்படாத நிலையில் பணியாளர்கள் உடனடியாக வேலைக்கு வரவேண்டும் என்ற சட்டம் பிறப்பிக்கப்படும் என தொழிலாளர் துறை அமைச்சர் எச்சரித்தார்.
ஜீன் 20ஆம் திகதி பணியாளர்கள் பணிக்கு திரும்பும் கட்டாய சட்டம் பொதுச்சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் அது வாராந்த இறுதி வரை நிறைவேறவில்லை. பின்னர் அந்த சட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. இந்த அரசு சட்டம் வந்ததை தொடர்ந்து தபால் ஊழியர்கள் திங்கட்கிழமை பணிக்கு திரும்பினர்.

0 comments:

IP
Blogger Widgets