சர்வதேச நிதியத்தின் தலைவராக கிறிஸ்டைன் லாகர்டே தேர்வு

Monday, July 18, 2011

சர்வதேச நிதியத்தின் அடுத்த தலைவராக பிரான்ஸ் நிதியமைச்சர் கிறிஸ்டைன் லகார்டே(55) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதன் மூலம் இந்த அமைப்பின் முதலாவது பெண் தலைவர் என்கிற பெருமையை அவர் பெறுகிறார்.

ஐ.எம்.எப் தலைவராக இருந்த ஸ்டிராஸ்கானின் மீது பாலியல் புகார் கூறப்பட்டதையடுத்து அவர் அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவருக்கு அடுத்தபடியாக அந்தப் பதவிக்குரியவரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஐ.எம்.எப் அமைப்பின் செயற்குழு வாஷிங்டனில் செவ்வாய்க்கிழமை கூடியது.
மெக்ஸிகோ மத்திய வங்கி ஆளுநர் அகஸ்டின் கார்ஸ்டென்ஸ், லாகர்டே ஆகியோருக்கு இடையே கடுமையான போட்டி இருந்தது. எனினும் அமெரிக்கா, ரஷியா, சீனா, ஐரோப்பிய நாடுகளின் ஆதரவுடன் லகார்டே தேர்வு செய்யப்பட்டார்.

0 comments:

IP
Blogger Widgets